பிறந்தவுடன் குழந்தைகளுக்குக் கிடைக்கும் சுவையான ஆற்றல் தான் தாய்ப்பால். குழந்தைகள் எவ்வித நோய் நொடியும் இன்றி ஆரோக்கியமாக எதிர்ப்பு ஆற்றலுடன் வாழ வேண்டும் என்றால் கண்டிப்பாக தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இவற்றின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வருகின்ற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை "உலக தாய்ப்பால் வாரம்" கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தாய்ப்பால் ஊட்டுவதை செயல்படுத்துதல்: வேலை செய்யும் பெற்றோருக்கு மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற கருப்பொருளை மய்யமாகக் கொண்டு தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது.
இருந்தபோதும் தாய்ப்பால் கொடுப்பது பற்றி பொதுவான கட்டுக்கதைகள் மக்களிடம் முன்வைக்கப்படும் சூழலில், இதன் உண்மைகளை நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதோ இங்கே சுகாதார நிபுணர்கள் தரும் விளக்கங்கள் குறித்து நாமும் அறிந்து கொள்வோம்.
கட்டுக்கதை
தாய்ப்பால் நீண்ட நேரம் கொடுக்கவில்லை என்றால் கெட்டுவிடும் என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. இதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு தான் பணிக்கு செல்லும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை.
உண்மை
பல மணி நேரம் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் அது கெட்டுப்போகாது.நீங்கள் எப்போது வந்து தாய்ப்பால் கொடுத்தாலும் புதிதாக உற்பத்தியாகிறது என்கிறார் வேளச் சேரி பிரசாந்த் மருத்துவமனையின் குழந்தை மருத்துவப் பிரிவு மருத்துவர் டி விஜயகுமார்.
கட்டுக்கதை:
தாய்ப்பால் கொடுக்கும் போது நீங்கள் இறைச்சி சாப்பிட்டால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?இந்தக் கேள்வி அதிகளவில் மக்கள் மனதில் எழக்கூடும். சிக்கன், மட்டன் போன்ற உணவுகளைச் சாப்பிடும் போது குழந்தை களுக்கு சூடு மற்றும் அஜீரணம் ஏற்படும் என கூறுவதால் தாய்மார்கள் இந்த உணவுகளை சாப்பிடுவதில்லை.
உண்மை
ஒரு தாய் நல்ல தரமான புரதங்களுடன் நல்ல தரமான உணவை எடுத்துக் கொள்ளும்போது, அது சிறந்த தாய்ப் பாலைச் சுரக்கச் செய்யும். மேலும் அது குழந்தைக்கு எந்த வெப்பத்தையும் அல்லது அஜீரணத்தையும் கொடுக்கப் போவதில்லை" என்கிறார் மருத்துவர் விஜயகுமார்.
கட்டுக்கதை:
அம்மாக்களுக்கு உடல் நல பாதிப்பு இருந்தால் தாய்ப் பால் கொடுக்கக் கூடாது என்றும் இதனால் குழந்தைகளுக்கு நோய் பரவும் என்ற கட்டுக்கதையை மக்கள் நம்புகின்றனர். இதன் உண்மை தன்மைக் குறித்து விளக்குகிறார் மருத்துவர் அருணா கல்ரா.
உண்மை:
ஒரு தாய் நோய்வாய்ப்பட்டிருந்தாலும், அவர் குழந் தைக்குத் தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும். ஒருபோதும் நிறுத்திவிடக்கூடாது. அதே சமயம் அவர் முகம் மற்றும் மூக்கு மற்றும் வாயை மறைத்து குழந்தைக்கு உணவளிக்கலாம். உணவளிக்கும் முன் மார்பகத்தை சரியாக சுத்தம் செய்வது நல்லது.
கட்டுக்கதை:
தாய்ப்பாலை பாட்டிலில் கொடுப்பதும், தாய்பால் நேரடியாக கொடுப்பதும் ஒன்றுதான் என்பது தாய்ப்பால் கொடுப்பது குறித்து பொதுவாக சொல்லப்படும் ஒரு கட்டுக்கதையாக உள்ளது.
உண்மை:
தாய்ப்பால் கொடுக்கும் போது அல்லது காம்புகளில் இருந்து நேரடியாக குழந்தைகள் பால் குடிக்கும் போது குழந்தைக்கு சிறந்த பிணைப்பு, சிறந்த மூளைத் தூண்டுதல் மற்றும் சிறந்த பால் உற்பத்தியை அதிகப்படுத்து கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் பம்ப் செய்து, குழந்தைக்கு கிண்ணம்-ஸ்பூன் அல்லது பாட்டிலில் பாலைக் கொடுக்கும் போது, இது சில மாதங்களுக்குப் பிறகு பால் உற்பத்தியைக் குறைக்கும். அது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் கொடுக்காது. பொதுவாக ஒவ்வொரு பெண்களும் தாய்ப்பால் கொடுக்கும் போது, புரதம் நிறைந்த உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். பாலூட்டும் காலத்தில் ஒரு தாய்க்கு தனது உணவில் தரமான புரதம் தேவை. மேலும் உணவில் இருந்து குறைந்தபட்சம் 1800 கலோரிகள் இருக்க வேண்டும். அப்போது தான் பெண்களுக்கு சரியான பால் உற்பத்தி ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.
No comments:
Post a Comment