தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரிடம் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரிடம் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிப்பு

சென்னை,ஆக.1- தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத் தலைவர் ஹன்சராஜ் கங்காராம் அஹிர் சென்னைக்கு நேற்று (31.7.2023) வருகை தந்துள்ளதை யொட்டி அவருக்கு வர வேற்பு அளித்து, அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி தலைமையில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் ஆண்டு வருவாய் ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும், மக்கள் தொகையில் ஜாதிவாரியான கணக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும், அரசுப்பணியிடங்களில் பதவி உணர் வில் இடஒதுக்கீடு அளிக் கப்பட வேண்டும் என்று கோரியதற்கு அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார்.

மேலும், பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் சார்பில், 10.8.2023 அன்று நடைபெறுகின்ற சமூக நீதி மாநாட்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

பொதுச்செயலாளர் கோ.கருணாநிதியுடன் எஸ்.அன்புகுமார், ஏ. ராஜசேகரன், ஜி.சுரேஷ், எம்.பாக்யராஜ், எஸ்.நட ராஜன், முருகன், வி. கோபு, அனில் சகர்கார், மானவ் பிரகாஷ், சின்ன துரை மற்றும் பரோடா வங்கி, திருச்சி பெல், சென்சஸ், சிபிசிஎல், அய் சிஎஃப், அய்ஓபி, அய்அய் டி-சென்னை, ஜிஅய்சி, யூஅய், எச்விஎஃப், நெய் வேலி என்.எல்.சி., யூனி யன் வங்கி உள்ளிட்ட பல் வேறு நிறுவனங்களின் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலை வர்கள், பொறுப்பாளர்கள் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.

No comments:

Post a Comment