கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 18, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

 18.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉 மகாராட்டிராவில் பட்னாவிசுக்கு ஏற்பட்ட   நிலைதான் பிரதமர் மோடிக்கும் ஏற்படும் என சரத்பவார் விமர்சனம்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉 மணிப்பூர் குக்கிஸ் இனமலைவாழ் மக்களின் பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கு தனி தலைமை செயலாளர், காவல்துறை இயக்குநர் கோரி பிரதமருக்கு கடிதம்.

👉தமிழ்நாடு மீனவர்கள் சங்க மாநாட்டில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

👉 அனைத்து மாநிலத்திற்கும் குரல் கொடுக்கும் மாநில கட்சியாக திமுக உள்ளது. என முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தொண்டர் களிடையே ராமநாதபுரத்தில் பேச்சு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் நாடாளுமன்றத்தில் குரல்களை ஒடுக்க வழிவகுக்கும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கண்டனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 நூஹ் மாவட்ட ஊர்வலத்தின் போது சங் பரிவார் கூட்டம் வாள்கள், திரிசூலங்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தி இந்து:

👉2024 பொதுத் தேர்தலில் உ.பி.யில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். என அகிலேஷ் யாதவ் உறுதி.

👉பல்லுயிர் மற்றும் வனப் பாதுகாப்பு குறித்த இரண்டு புதிய மசோதாக்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலம் மோடி அரசை மன்னிக்காது என சி.பி.அய். எம்.பி. பினாய் விஸ்வம் காட்டம்.

தி டெலிகிராப்:

👉நாட்டில் பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் பிரதமர் மோடி ஒன்றும் பேசாமல் மவுனமாக இருப்பார் என டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டு. 

👉 பில்கிஸ் பானு வழக்கில் குறிப்பிட்ட சில கைதிகளை விடுவிப்பதற்கான விதிகளை குஜராத் அரசு பயன்படுத்தியது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி. 

டைம்ஸ் ஆப் இந்தியா:

👉 2022 குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக 209 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக செலவு அறிக்கை.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment