ஏழுமலையான் காப்பாற்றினானா? மலைப்பாதையில் சென்ற சிறுமியை அடித்துக் கொன்ற சிறுத்தை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

ஏழுமலையான் காப்பாற்றினானா? மலைப்பாதையில் சென்ற சிறுமியை அடித்துக் கொன்ற சிறுத்தை

திருப்பதி, ஆக. 12 திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில்   தனது குடும்பத்தாருடன் நடந்து சென்று கொண்டிருந்த 6 வயது சிறுமியை, சிறுத்தை திடீரென இழுத்துச் சென்று, அடித் துக் கொன்றுள்ளது. இந்த சம்பவத் தால் பக்தர்கள் திருமலைக்கு நடை பாதை வழியாக இரவில் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று திருப்பதிக்கு வந்தனர். பின்னர் இரவு 8 மணிக்கு  லக்‌ஷிதா (6) தனது பெற்றோருடன் திருமலைக்கு மலைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, லட்சுமி நரசிம்மர் கோயில் அருகே பெற்றோருக்கு சற்று முன் நடந்து சென்றுக் கொண் டிருந்த லக்‌ஷிதாவை திடீரென வந்த சிறுத்தை ஒரு புதருக்குள் அடித்து இழுத்துச் சென்றது. தமது கண் முன் மகளை சிறுத்தை இழுத்து செல்வதை பார்த்து பெற்றோர் அலறி கூச்சலிட்டனர். சக பக்தர்கள் சிறுத்தையை பின் தொடர்ந்தனர். 

இது குறித்து இரவே திருப்பதி வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், இரவு நேரம் என்பதால் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இன்று காலை மீண்டும் அப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் தேவஸ் தான ஊழியர்கள் சிறுமி லக்‌ஷி தாவை தேடும் பணியில் ஈடுபட் டனர். அப்போது, லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சற்று தூரத்தில், சிறுமி லக்‌ஷிதாவின் உடல் கண்டு பிடிக் கப்பட்டது. சிறுமியின் உடல் பாதி தான் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

தனது மகளின் உடலைக் கண்டு பெற்றோர், உறவினர் கதறி அழு தனர். பின்னர் உடல் உடற்கூராய் வுக்காக  திருப்பதி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 2 மாதங்களுக்கு முன் பெற்றோருடன் இதே போன்று திருமலைக்கு மலையேறி சென்று கொண்டிருந்த 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்விக்கொண்டு ஓடியது. ஆனால், பெற்றோர், பக்தர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சிறுத் தையை துரத்தியபடி ஓடிச்சென்ற தால், அது சிறுவனை ஒரு புதர் அருகே விட்டுவிட்டு தப்பி ஓடியது. பின்னர் அந்த சிறுத்தையை தேவஸ் தானத்தினர் பிடித்து மீண்டும் வனப்பகுதியிலேயே விட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மலையில் உள்ள நடைபாதையில் இருபுறமும் இரும்பு வேலி அமைக் கப்படும் என திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் அப் போதைய அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி ஆகியோர் அறிவித்தனர். 

ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தினால், ஒரு சிறுமியின் உயிர் போயுள்ளது என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளையும், அவர்களின் அலட்சியப் போக் கையும் கண்டித்துள்ளனர்.


No comments:

Post a Comment