கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு நன்கொடைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு நன்கொடைகள்

கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ண கிரி மாவட்ட செயலாளராக புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும் அ.மாதேஷ் மற்றும் கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் ஆலபட்டி ரமேஷ், சூளகிரி ஒன்றிய செயலாளர் பாக்யராஜ் மற்றும் பொறுப்பாளர்க ளுக்கு கழகத்தின் சார்பில் சால்வை அணி வித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் பெரியார் மய்யத்தை பார்வை யிட்டு, வருகின்ற 25ஆம் தேதி திறப்பு விழா பணிகள் பற்றி கேட்டு அறிந்த  விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் மாதேஷ் பெரியார் மய்யத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் நன்கொடை வழங்குவதாக அறிவித்து அதற்கான ரசீதை தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமடம் பெற்றுக் கொண்டார். உடன் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் த.அறிவரசன்,  செயலாளர் மாணிக்கம், துணைத் தலைவர் வ.ஆறுமுகம், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், கிருஷ்ண கிரி நகர தலைவர் கோ. தங்கராசன், பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிடமணி கிருஷ்ணகிரி ஒன் றிய தலைவர் தா.மாது, தருமபுரி மண்டல ஆசிரியர் அணி அமைப்பாளர்  கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச. கிருஷ் ணன் மற்றும் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

கிருஷ்ணகிரி விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் கிழக்கு மாவட்ட செயலாளராக புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும் குபேந்திரனுக்கு திரா விடர் கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு 20 ஆயி ரம் ரூபாய் நன்கொடை வழங்குவதாக அறிவித்து அதற்கான ரசீதை தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமனிடம் பெற்றுக் கொண்டார். 

ஊற்றங்கரை குப்பு மருத்துவமனை மருத்து வர் கே.இராசு அவர்கள் கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்திற்கு ரூ.2000 நன்கொடையை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமனிடம் வழங்கினார்.

No comments:

Post a Comment