பெங்களூரில் குடும்ப விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 28, 2023

பெங்களூரில் குடும்ப விழா

பெங்களூரு, ஆக.28- -கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், அறிஞர் அண்ணாவின் நெருங் கிய நண்பரின் மகனுமான 

பு.இரா.கஜபதி _- ஜெயலட்சுமி இணையரின் 65ஆம் ஆண்டு திருமண நாள் விழா பெங்களூர் சம்பங்கிராம் நகர் (24.8.2023) இல்லத்தில் சிறப்பாக நடை பெற்றது.

மாநிலத் தலைவர் மு.சான கிராமன் விழாவிற்கு தலைமை யேற்று கஜபதி _- ஜெயலட்சுமி இணையருக்கு மைசூர் தலைப் பாகைகளை இருவருக்கும் அணி வித்து, பயனாடைகளையும் இருவ ருக்கும் அணிவித் தார். உடைகள் நிறைந்த பரிசுப் பெட்டியினை வழங்கிப் பாராட்டினார். செயலா ளர் இரா.முல்லைக்கோ எழுதிய மூன்று நூல் களை இணையருக்கு வழங்கி 84 வயது நிறைவும், 65 ஆண்டு திருமண வாழ்வின் சிறப்பி னையும், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணாவின் வீட்டிற்கு அரு கில் வாழ்ந்த இளமைக்கால நிகழ்வுக ளையும் மகிழ்வுடன் கூறி மகிழ்ச்சி யடையச் செய் தார்.

மேலும் நாடகச் செம்மல் வீ.மு.வேலு இணையரின் கழக செயல்பாடுகளை விளக்கி பாராட்டி மகிழ்ந்தார்.

கழகத்தின் தென்மண்டலச் செயலாளர், பெரும் புலவர் கி.சு.இளங்கோவன்_ - அன்னம் மாள் ஆகிய இருவரும் விழா நாயகர்களுக்கு மைசூர் தலைப் பாகை, பயனாடைகள், சரிகை அலங்கார மாலைகள் அணி வித்து சிறப்பு செய்து, வாழ்த் தினார் மற்றும் உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment