தா.பழூர் ஒன்றியத்தில் கிளைக் கழக வாரியான சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 6, 2023

தா.பழூர் ஒன்றியத்தில் கிளைக் கழக வாரியான சந்திப்பு

தா.பழூர்,ஆக.6 - அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றி யத்தில் கிளைக் கழக வாரியான சந்திப்புக் கூட்டம் 2.8.2023 அன்று மாலை 4 மணிக்கு உல்லியக்குடி சிற்றரசு இல்லத்தில் தொடங்கியது.

பெரியார் சிலையைப் புதுப் பிக்கவும், கழகக் கொடியேற்றவும், பெரியார் பெருந்தொண்டர் உல்லியக்குடி ரங்கசாமியின் நூற்றாண்டு விழாவினை சிறப் பாக நடந்திடவும் திட்டமிடப் பட்டது.

அதன் பிறகு உல்லியக்குடி சங்கரை கழகப் பொறுப்பாளர் கள் சந்தித்தனர்.

இரண்டாவது கிளைக் கழக மான கோரைக்குழி கிராமத்தில் ஆசைத்தம்பி குடும்பத்தினரை சந்தித்து இயக்க வளர்ச்சிகள் குறித்து கலந்துரையாடப் பட்டது.

மாலை 5.30 மணியளவில் கோட்டியால் கிளைக் கழகத் தலைவர் பழனி வேல் அவர்களை சந்தித்து கலந்துரையாடப் பட்டது.

மாலை 6 மணியளவில் தா.பழூர் ராஜேந்திரன் இல்லத் திலும், 6.30 மணியளவில் சிந்தாமணி ராமச்சந்திரன் இல்லத்திலும்,

6:45 மணியளவில் கோடங் குடி இலக்கியச்செல்வி இல்லத்திலும் கிளைக் கழக சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இரவு 7 மணியளவில் ஆயிப் பாளையம் வெங்கடாசலம் இல்லத் திலும், 7.30 மணியளவில் பெரியார் பெருந்தொண்டர் உதயநத்தம் மகாலிங்கம் இல்லத்திலும்,

8 மணியளவில் உதயநத்தம் தமிழ்சேகரன் இல்லத்திலும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அனைத்து கூட்டங் களிலும் தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் மு.கோபால கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று இயக்கத்தின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசி யத்தையும், கழகக் கொடியேற்று வது குறித்தும், தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது குறித் தும் கலந்துரையாடினர்.

மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப்பாளர் இரா.ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் இர.ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி.வெங்கடா சலம் ஆகியோர் கலந்துகொண் டனர்.

நலம் விசாரிப்பு

உல்லியக்குடி கிராமத்தைச் சேர்ந்த கழகத் தோழர் வை.கலை யரசனின் தந்தையார் உடல் நலம் குறைந்து கவலைக்கிடமான நிலைமையில் இருப் பதை அறிந்து கழகப் பொறுப்பாளர்கள் அவரது இல்லம் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தனர். அதே போல் தா.பழூர் ஒன்றிய அமைப்பாளர் தமிழ்சேகரனின் தாயார் அவர் களை சந்தித்தும் தோழர்கள் நலம் விசாரித்துத் திரும்பினர்.


No comments:

Post a Comment