முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை பல மொழிகளில் ஒலிபரப்பத் திட்டம்
சென்னை,ஆக.31- திமுக தலைவரும், 'இந் தியா' கூட்டணியின் முன்னணித் தலைவர் களில் ஒருவருமான, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' எனும் தலைப்பில் ஆற்றுகின்ற உரை பல்வேறு மொழிகளில் மாற்றம் செய்து ஒலிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
சமூகநீதி, மதச்சார்பற்ற அரசியல், சம தர்மம், சமத்துவம், மாநில சுயாட்சி, கூட் டாட்சிக் கருத்தியல் ஆகியவை உள்ளதே இணையற்ற இந்தியா. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே பண்பாடு, ஒரே தேர்வு, ஒரே தேர்தல் உள்ளிட்டவையெல்லாம், பலவகைப்பட்ட மக்கள் வாழும் இந்தியாவை உருக்குலைக்கும் நச்சுக் கருத்துகள்.
குமரி முதல் இமயம் வரையிலான பரந்து விரிந்த இந்திய நாட்டைக் காப்பாற்றும் கடமை நம் அனைவர் கைகளிலும் இருக் கிறது என்ற நோக்கோடு, பாரதீய ஜனதா கட்சி ஆட்சியின் அலங்கோலங்களை அம் பலப்படுத்தியும், பன்முகத்தன்மை கொண்ட, வலுவான மாநிலங்கள் கொண்ட, மதச்சார் பற்ற இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்தும், கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், Podcast (குரல்பதிவுத் தொடர்) வடிவில், Speaking for India என்ற தலைப்பில் பேச இருக்கிறார். இத்தொடர் ஆங்கிலத்திலும், இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய் யப்பட்டும் வெளியாகவுள்ளது.
No comments:
Post a Comment