புவியில் புதுமைக் கண்டுபிடிப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

புவியில் புதுமைக் கண்டுபிடிப்புகள்

1. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த மரபுசாரா எரிபொருள் உற்பத்தி நிறுவனமான ‘இகோட்ரிசிட்டி,’ சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத ‘ஈகோஜெட்’ விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. ஹைட்ரஜன் வாயு விலிருந்து மின்சாரம் தயாரித்து இதை இயக்க உள்ளனர். 2025ஆம் ஆண்டு இது பயன்பாட்டுக்கு வரும். விமானத்தின் உள்ளேயும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத உணவு, தொழிலாளர் உடைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.

2. அமெரிக்காவின் வாசிங்டன் மருத்துவப் பல்கலையைச் சேர்ந்த மருத்துவர்கள் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட, 60 வயது நோயாளிக்கு மிகவும் சிக்கலான, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை, ரோபோவை வைத்து வெற்றிகரமாக செய்துள்ளனர். ரோபோவின் அருகில் இருந்தபடி, அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் அதனை இயக்கி வெற்றி கண்டுள்ளனர்.

3. புவி வெப்பத்தை அதிகரிக்க வைக்கும் பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானது மீத்தேன். இது பசுக்களின் சாணத்தில் இருந்து அதிகளவில் வெளிவருகிறது. சுவீடன் நாட்டு விவசாய பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பசுஞ்சாணத்தில் ‘ஆஸ் பராகாப்சிஸ் டாக்ஸ்ஃபோர்மிஸ்’ எனும் சிவப்பு நிறப்பாசியைச் சேர்ப்பதன் வாயிலாக, அதிலிருந்து உற்பத்தி ஆகும் மீத்தேனை, 44 சதவீத அளவுக்குக் குறைக்க முடியும் என்று கண்டு பிடித்துள்ளனர்.

4. ஆஸ்திரேலியாவின் குவின்ஸ் லாந்து பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘மெகாலோபிகி ஓபெர் குலாரிஸ்’ எனும் ஒருவகை புழுவின் முடியிலிருந்து எடுக்கப்படும் சில மூலக்கூறுகளுக்குப் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் இதிலிருந்து புற்று நோய்க்கான மருந்து தயாரிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித் துள்ளனர்.

5. ரஷ்யாவின் லூனா 25 விண்கலம், ஆகஸ்ட் 11ஆம் தேதி சந்திரனுக்குச் செலுத்தப்பட இருக் கிறது. இது சந்திரனின் தென் துருவத்தை அடைந்து அங்குள்ள மண்ணை ஆராய்ந்து, அதில் பனிக் கட்டிகள் உள்ளனவா என்று கண்டறிய உள்ளது.

No comments:

Post a Comment