மெத்தனமாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 30, 2023

மெத்தனமாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

சென்னை,ஆக.30- நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (29.8.2023) செய்தியாளர் களிடம் கூறுகையில், காவிரி ஆணையத்தின் உத்தரவை ஏற்க முடியாது எனவும், குறுவை சாகுபடி பயிரைக் காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வழங்க வேண் டிய காவிரி நீரை கருநாடக அரசு உடனடியாக வழங்க உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசு சார்பில் செப்டம்பர் 1-ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

நேற்று மாலை செய்தியாளர் களைச் சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி மேலாண்மை ஆணை யம் நாங்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆகை யால் வேறுவழி கிடையாது, மறுபடியும் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதான் எங் களுக்குள்ள ஒரே வழி. செப்.1 அன்று உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்” என்று கூறினார்.

காவிரி மேலாண்மை ஆணை யம் நேற்று (29.8.2023) புது டெல்லியில் கூடிய நிலையில் சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர் கள் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் நேற்று முன்தினம் (28.8.2023) காவிரியில் 5 ஆயிரம் கன அடி தண்ணீரை 15 நாட் களுக்கு திறந்து விடும்படி அந்தக் கமிட்டி சிபாரிசு செய்திருக்கிறது. ஆனால் அது போதாது என்று நாம் சொல்லி உள்ளோம்.

எனவே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்தது. அதில் தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவர் சுப்பிர மணியம் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

அவர்கள் தமிழ்நாட்டின் கோரிக்கையை வற்புறுத்தினர். 

வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் வழங்கினால்தான் பயிர்கள் காயாமல் இருக்கும் என்பதை அழுத்தம் திருத்த மாகக் கூறினர்.

கருநாடக முதலமைச்சர் சித்தராமையா, அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை என்று கூறி உள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் நாங் கள் சொன்னதை ஏற்றுக் கொள் ளவில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழு கூறியதைத்தான் காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆகையால் எங்களுக்கு வேறு வழி கிடையாது. மறுபடியும் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டியதுதான். வரும் வெள் ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. அன்றைக்குத் தெரிவிப்போம். அவர்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

எங்களுக்கு தண்ணீர் வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். குறைந்தது வினாடிக்கு 24,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று கேட்கி றோம்.

அவர்கள் வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் 15 நாட்களுக்கு வரும் என்று கூறுகிறார்கள். அதனால்தான் நாங்கள் நீதி மன்றத்துக்குச் சென்றிருக்கி றோம். வெள்ளிக்கிழமை வழக்கு வருகிறது. குறுவை சாகுபடி மோசமான நிலையில் உள்ளது. கருநாடகா 45 டி.எம்.சி. தண்ணீர் தராமல் நிலுவையில் வைத் துள்ளனர்.

-இவ்வாறுஅமைச்சர் துரைமுருகன் கூறினார்.

No comments:

Post a Comment