யாழ்ப்பாணம் - நாகப்பட்டினம் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

யாழ்ப்பாணம் - நாகப்பட்டினம் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை

ராமேசுவரம், ஆக. 5- இலங் கையில் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன் துறைக்கும், நாகப்பட்டி னத்துக்கும் இடையே விரைவில் பயணிகள் கப் பல் சேவை தொடங்கப் பட உள்ளது.

யாழ்ப்பாணம்-காங் கேசன்துறை துறைமுகம் அந்நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது சேதமடைந்தது. இந்த துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு, கடந்த 2018ஆம் ஆண் டில் சுமார் ரூ.300 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கியது. இந்தியாவின் நிதி உதவி மூலம் இத் துறைமுகமானது, வர்த் தக ரீதியிலான துறைமுக மாக அடிப்படை கட்ட மைப்பு வசதிகள் மேற் கொள்ளப்பட்டு, 16.6.2023 இல் திறக்கப் பட்டது.

முன்னதாக, காங்கே சன் துறையிலிருந்து புதுச் சேரியிலுள்ள காரைக் காலுக்கு பயணிகள் கப் பல் சேவை தொடங்க பேச்சுவார்த்தைகள் நடை பெற்று வந்தன. ஆனால், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கடந்த மாத இந்திய வருகையின்போது, காங்கேசன் துறை--நாகப்பட்டினம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இரு நாடுக ளுக்கு இடையே ஒப்பந் தம் கையெழுத்தானது.

இது குறித்து வவுனியா வில் உள்ள இலங்கைக் கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் செய்தியாளர் களிடம் கூறியதாவது: காங்கேசன் துறை - காரைக்கால் இடையே கப்பல் சேவை தொடங்க திட்டமிட்டி ருந்த நிலையில், தற்போது காங்கேசன்துறை -- நாகப் பட்டினம் இடையே பயணப்பாதை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நாகப்பட்டி னத்தில் பயணிகள் முனை யம், சுங்க அலுவலகம் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்தவுடன் பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கப் படும் என்றார்.

நாகப்பட்டினம் துறை முகத்தில் பயணி கள் முனையம் அமைப்ப தற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள் ளன. இத்திட்டத்துக்காக வெளியுறவு அமைச்சகம் ரூ.8 கோடியை அனுமதித் துள்ளது. காங்கேசன் துறை -- நாகப்பட்டினம் இடையே சுமார் 110 கி.மீ. தொலைவும், 4 மணி நேர கடல் பயணமுமாகும்.

சுமார் 40 ஆண்டுகளுக் குப் பிறகு, தமிழ்நாட்டிலி ருந்து இலங்கையில் உள்ள வடமாகாணப் பகுதிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது, இந் திய--இலங்கை மக்களி டையே மகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment