ஒன்றிய பிஜேபி ஆட்சியில் 'மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித்திட்டத்தின்' பரிதாப நிலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 22, 2023

ஒன்றிய பிஜேபி ஆட்சியில் 'மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித்திட்டத்தின்' பரிதாப நிலை

புதுடில்லி,ஆக.22 - 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்திற்கு வழங்க வேண்டிய ஊதியம் ரூ.6,366 கோடி பாக்கி வைத்துள்ளது மோடி அரசு. அது மட்டுமின்றி இந்த திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் ஒரு குடும்பத்திற்கு 16.64 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிலையே உள்ளது. அதிலும் இவ்வளவு பாக்கி வைத்துள்ளது. 

இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் வேலை நடைபெறும் இடங்களைக் கண்காணிக்க ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்த ஒன்றிய அரசு முடிவுசெய்துள்ளது.

“100 நாள் வேலைத் திட்டப் பணிகளில் தொழிலாளர்களுக்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன் படுத்துவது, பலர் வேலை  செய்யாமலேயே ஊதியம் பெறுகின்றனர். பல  இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட பணிகளைத் தவிர  வேறு சில பணி கள் நடைபெறுகின்றன என பல புகார்கள் எங்களுக்குத் தொடர்ந்து வருகின்றன. இது போன்ற தருணங்களில் நிகழ்நேரக் கண்காணிப்பு மற்றும் ஆதாரங்களைச் சேகரிப்பதற்கு ஆளில்லா விமானங்கள் உதவியாக இருக்கும்” என்கின்றனர். 

இதற்கு முன்னர் மே 2022 முதல், பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட மொபைல் அடிப்படையிலான அப்ளிகேஷனைப் பயன் படுத்தி, அனைத்துப் பணியிடங்களிலும் வருகைப் பதிவைக் கணக் கிடுவதை ஒன்றிய அரசு கட்டாய மாக்கியது. தற்போது ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்திக் கண்காணிப்பதையும் சாதனை என்கின்றனர்.

ஆனால் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஒன் றிய அரசு வழங்க வேண்டிய பாக்கி ரூ.6,366 உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது. இருப்பினும், இந்த ஆளில்லா விமானங்களை பயன் படுத்துவதற்கு ஒன்றிய அரசு எந்த கூடுதல் நிதியையும் மாநிலங்களுக்கு வழங்கவில்லை.  ஒன்றியஅரசு ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்யும் 100 நாள் வேலைத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் குறைந்தது 10 சதவீத நிதியை ஆளில்லா விமானங்கள் வாங்க செலவிட வேண்டி வரும். எனவே  இதிலிருந்து நழுவிக் கொண்டு  இந்தச் செலவை மாநில அரசுகளின் தலையில் சுமத்தப் பார்க்கிறது.

ஆளில்லா விமானங்களிலிருந்து பெறப்படும் காட்சிப் பதிவுகள் மற்றும் ஒளிப்படங்களை சேமிப் பதற்கும், தரவு பகுப்பாய்விற்கும் நாடு முழுமைக்கும் பொதுவான ஒரு தரவுதளத்தை நிறுவவும் ஒன்றிய அரசு யோசிக்கிறதாம். பத்து சதவீத நிதியை ஒதுக்கு வதிலிருந்து நழுவிக்கொள்ளும் ஒன்றிய அரசு,  மாநிலங்களுக்கு ஆலோசனையை மட்டும் வழங்குகிறது. அதாவது, மாநில அரசு கள் ஆளில்லா விமானங்களை வாங்குவதற்குப் பதில் நிபுணத்துவம் பெற்ற ஏஜென்சிகளை நியமிக்கலாம் எனக் கூறியுள்ளது. 

உண்மையிலேயே விவசாயத்  தொழிலாளிகள் மீது ஒன்றிய அர சுக்கு அக்கறையிருக்குமென்றால் ஏற்கெனவே கடந்த ஆண்டு ஒதுக் கப்பட்ட ரூ.73 ஆயிரம் கோடியை இரு மடங்காக உயர்த்தியிருக்க வேண்டும்.

ஆனால் அதை ரூ.60 ஆயிரம் கோடியாக வெட்டிவிட்டு ஒன்றிய அரசு, பணித்தளங்களில் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தப் போவதாகக் கூறுவது இந்தத் திட்டத்தையே ஒழித்துக்  கட்டுவதற்கான முயற்சியாக தெரிகிறது.

100 நாள் வேலை எனக் கூறி விட்டு  ஒரு தொழிலாளிக்கு நாற்பது நாட்கள் கூட வேலை  வழங்கப்பட வில்லை. ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம் பற்றாக்குறையைச் சமா ளிக்க  கூடுதலாக ரூ.25,000 கோடி வேண்டுமெனக் கேட்டது. ஆனால் நிதி அமைச்சகமோ ரூ.16,000 கோடிக்கு  மட்டுமே ஒப்புதல் அளித்துள்ளது. 

கடந்த நான்காண்டுகளில் நாடு  முழுவதும் சராசரியாக 48 நாட்கள்  முதல் அதிகபட்சம் 52 நாட்களே வேலை வழங்கப்பட்டுள்ளது. 2022-_2023-ஆம் ஆண்டில் இது 42  நாட்களாக குறைக்கப்பட்டு விட்டது. நாடு முழுவதும் இந்தத்  திட்டத்தை முறையாக செயல்படுத்த ரூ.2.72 லட்சம் கோடி தேவை. மற்றொரு புறத்தில் ஒவ்வொரு குடும்பத்திற் கும் குறைந்தது 40 நாட்கள் வேலை வழங்க வேண்டுமென்றாலும் கூட ரூ.1.24 லட்சம் கோடி நிதி தேவை.  இது தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை விட இரண்டு  மடங்கு அதிகம். 

ஒன்றிய அரசு மிகக்குறைவான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது ஏழைகள்மீதுமிருகத்தனமாக நடத்தப்பட்டுள்ள சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்றால் அது மிகையல்ல என்கின்றனர்.

தற்போது ஒன்றிய அரசு ஒதுக் கீடு செய்துள்ள ரூ.60 ஆயிரம் கோடியின் மூலம் ஒரு குடும்பத்திற்கு 16.64 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும். 

நாடு  முழுவ தும் கணக்கிட்டால் 100 நாள்  வேலைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் குடும்பங்களில் மூன்று சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான் திட்டத்தின் முழுப் பயனையும் அடைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment