டில்லி, ஆக. 9- பொதுத்துறை நிறு வனங்கள், அரசுத் துறை தனியார் மயமாக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். 2021ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பில் ஓபிசி உள்ளிட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட் டோரில் முன்னேறிய பிரிவினர் எனும் ‘கிரிமிலேயர் முறை’ முற்றி லும் நீக்கப்பட வேண்டும்.
ஓபிசிக்களுக்கான கிரீமிலேயர் கொள்கையை ஒழிக்கும் வரை, ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்ச மாக உயர்த்த வேண்டும். பிற்படுத் தப்பட்டோர்க்கு ஒன்றிய அரசில் தனி அமைச்சகம் உருவாக்க வேண் டும். பதவி உயர்வில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப் பட வேண்டும். இணைச் செயலா ளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி நியமனங்களை ரத்து செய்து யு.பி.எஸ்.சி. தேர்வு மூலம் இட ஒதுக்கீடு கொள்கை அடிப் படையில் பணி நியமனம் செய்திட வேண்டும். இட ஒதுக்கீடு 50 சத வீதத்துக்கு மேல் கூடாது என்பதை நீக்கிட வேண்டும்; மண்டல் குழு அறிக்கையில் குறிப்பிட்டபடி, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு சதவீதம் 52 ஆக உயர்த்த வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான உயர்ஜாதியினருக்கு பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் எனும் அரிய வகை ஏழை களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.
நீதித்துறை மற்றும் தனியார்த் துறையில் இட ஒதுக்கீட்டை நிறைவேற்றிட வேண்டும். ஓபிசி நலனுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் ஓபிசி பிரிவினருக்கான சிறப்புக் கூறு திட்டம் (special component plan) ஆகியவை ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். அப்ரண்டிஸ் சட்டத் தின்படி அந்தந்த மாநில ஓபிசி மக்கள்தொகை விழுக்காட்டின்படி இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண் டும். (எ.கா. தமிழ்நாடு - ஓபிசி 76, எஸ்.சி.18). ஒன்றிய அரசின் மாநில அளவிலான பணி நியமனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு குறையாமல் அல்லது அந்தந்த மாநில இட ஒதுக்கீடு விழுக்காடு படி, எது அதிகமோ, அது அளிக் கப்பட வேண்டும்.
அனைத்து ஒன்றிய அரசின் துறைகளில், பணி நியமன ரிஜிஸ்டர் மற்றும் ரோஸ்டர் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தின் கிளை ஒவ்வொரு மாநில தலை நகரத்திலும் அமைக்கப்பட வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (10.8.2023) டில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது என்று அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலர் கோ.கருணாநிதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment