பழனி நெய்க்காரன்பட்டியில் வைக்கம் அறப்போர், கலைஞர் நூற்றாண்டு தெருமுனைக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 8, 2023

பழனி நெய்க்காரன்பட்டியில் வைக்கம் அறப்போர், கலைஞர் நூற்றாண்டு தெருமுனைக்கூட்டம்

பழனி, ஆக. 8- பழனி மாவட்ட கழகம் சார்பில் 5.-8.-2023, சனிக்கிழமை மாலை 6 மணியளவில் நெய்க்காரன்பட்டி பேருந்து நிறுத்தம் அரு கில் வைக்கம் அறப்போர், கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு பழனி ஒன்றியத்தலைவர் க.மதனபூபதி  தலைமை யேற்றார், வேலூர் கணே சன் அனைவரையும் வர வேற்றுப் பேசினார். 

இந்நிகழ்வை பழனி மாவட்டத் தலைவர் மா. முருகன் மற்றும் மாவட் டச் செயலாளர் பொன்.அருண்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் கழக பேச்சாளரும், பொதுக்குழு உறுப்பின ருமான புலவர்.வீரகலா நிதி விழாப் பேருரையாற் றினார்.

இந்நிகழ்வில் ச.திரா விடச்செல்வன்,  பெ.இர ணியன், சி.இராதாகிருட் டினன், ப.பாலன், குண.அறிவழகன், ச.பாலசுப் பிரமணி, அழகாபுரி சேகர், பத்ரா,   மற்றும் தி.மு.க, ம.தி.முக, வி.சி.க,  ஆதித் தமிழர் கட்சி, தமிழ்புலிகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, நாடாளும் மக்கள் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தோழர்களும் கலந்து கொண்டு உரை யாற்றி னர் இறுதியாக ந.இன்பத் தமிழன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment