அண்மைக்காலமாக சமூக வலை தளங்களில் பெரும் விவாதப் பொருளாக இருக்கும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திரேந்திர சாஸ்திரி என்ற பெயர் கொண்ட சாமியார், பெண்கள், தாழ்த்தப் பட்டவர்கள் அனைவரையும் மிகவும் மோசமாகப் பேசி சாஸ்திரங்களில் இப்படி உள்ளது என்று கூறி கிண்டல் அடிப்பார். மேலும் உலகில் உள்ள அனைத்து இஸ்லாம் நாட்டையும் ஹிந்து நாடாக மாற்ற நாம் ஆயுதம் ஏந்தவேண்டும், என்னிடம் ஆயுதம் உள்ளது தேவைப்படுபவர்கள் வாருங் கள் என்று எல்லாம் கூறினார். கடந்த மாதம் இவர் குடியரசுத்தலைவர் திரவு பதி முர்முவை சந்தித்ததும் சர்ச்சைக் குள்ளானது.
குடியரசுத்தலைவர் தன்னை சந்திக்க அனுமதி பெற்றவர்களைப் பற்றி முழு மையாக தெரியாமல், அவர்களை சந்திப்பதுமூலம் அவர்கள் இதைப் பயன்படுத்தி மேலும் மக்களை ஏமாற் றுவார்கள் என்று விமர்சகர்கள் எழுதி னார்கள்
இந்த நிலையில் இந்தூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாமியார் திரேந்திரர், ‘‘பாலாசோர் ரயில் விபத்து குறித்து எனக்கு முன்பே தெரியும் ஆனால் தலைவிதியை மாற்ற நான் யார்?'' என்று கூறினார்
அவர் மதம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது “மகாபாரதப் போர் நடக்கும் என்று கிருஷ்ணனுக்குத் தெரியும். ஆனால், அவர் அதை தடுக்க வில்லை. காரணம் ஆயிரக்கணக்கான வர்களின் விதி போரில் சாகவேண்டும் என்பது, அந்த விதியை மாற்ற கிருஷ்ணரால் கூட முடியாது. அதே போல் தான் ரயில் விபத்தில் சாகவேண் டும் என்பது அவர்களின் விதி, அதை தடுக்க நான் யார்? இறந்தவர்கள் அவரவர் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப பிறவி எடுப்பார்கள்; அதை நாம் தடுக்கமுடியாது” என்று கூறியிருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு மடங் களில் பொருட்கள் வாங்கித்தருபவராக இருந்தவர் திடீரென பாகேஷ்வர் மடத்திற்கு நான்தான் தலைவன் என்று அறிவித்துகொண்டு கடந்த 3 ஆண்டு களாக சத்சங் என்ற பெயரில் வரைமுறை இல்லாமல் உளறிவருகிறார்.
No comments:
Post a Comment