தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பாகவும் திராவிட உறவுகளின் சார்பாகவும், முதலமைச்சருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பாகவும் திராவிட உறவுகளின் சார்பாகவும், முதலமைச்சருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

சென்னை, ஆக.1 தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (1.8.2023) சென்னை தலைமைச் செயலகத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து நன்றி கூறினார்.

பிறகு, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டி வருமாறு:

எனக்கு அளிக்கப்பட்ட ‘‘தகைசால் தமிழர்'' விருதினைத் திராவிடர் இயக்கத்திற்கு அளிக்கப் பட்டதாகவும், தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்களைப் பெருமைப்படுத்துவதன் மூலமாக பெரியாரைப் பெருமைப்படுத்தி, பெரியாரைப் பேணுகின்ற, பெரியாரைத் துணைக் கொண்ட ஆட்சி என்று காட்டுவதற்கான ஒரு வாய்ப்பு என்று கருதுகின்றேன். முழுத் தகுதியாக  என்னை ஆக்கிக் கொள்கிறேன். 

இந்த ‘திராவிட மாடல்' ஆட்சிக்கும், அதன் ஒப்பற்ற முதலமைச்சருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பாக மட்டுமல்ல, தமிழ்கூறும் நல்லுலகத்தின் சார்பாக, தமிழ் உறவுகள், திராவிட உறவுகளின் சார்பாக, என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

No comments:

Post a Comment