சூரியனில் உள்ள ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் எரிந்து தொடர்ந்து வினைபுரிந்து கொண்டே இருக்கின்றன.
சூரியன்,பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலை வில் உள்ளது. சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் ஆகிறது. சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களுக்கும் சக்தி தரக்கூடிய மிகப் பெரிய ஆற்றல் கொண்டது சூரியன். சூரியனின் ஆற்றல் இல்லாமல் பூமியில் உயிர்கள் வாழ்வது கடினம்.
சூரியனின் மய்ய வெப்பம்15 மில்லியன் டிகிரி செல்சியஸ். இந்த உயர் வெப்ப நிலையில் அணுப் பிணைவு நடைபெற்றுக் கொண்டே இருப்பதால் இது சூரியனை உயிர்ப் புடன் வைத்துள்ளது.
சூரியனின் மேற்பரப்பின் வெப்பம் 5500 டிகிரி செல்சியஸ் (40 டிகிரி செல்சியசுக்கே நம் உடல் தாங்குவது கடினம்).
சூரியனில் நிகழும் சூரிய வெடிப் பின் தாக்கம் செயற்கைக்கோள் களிலும், விண்வெளி செலுத்து வாகனங்களிலும் அதன் தகவல் தொடர்பிலும் பல்வேறு தாக்கங் களை ஏற்படுத்தும். ஒரு வேளை விண்ணில் இருக்கக்கூடிய விண் வெளி வீரர்கள் நேரடியாக சூரிய வெடிப்பின் தாக்கத்தால் உயி ரிழப்பை சந்திக்க நேரிடலாம்.
எனவே இத்தகைய தாக்கங் களை முன்கூட்டியே அறிந்து அதற்கான செயல்களில் இறங்கு வது சரியான அணுகுமுறையாக இருக்கும்.
ஏன் ஆய்வு செய்ய வேண்டும்?
நமக்கு அருகில் உள்ள நட்சத் திரம் (15கோடி கி.மீ.) என்பதால் மற்ற நட்சத்திரங்களை ஆய்வு செய்வதைவிட சூரியனை ஆய்வு செய்வது அவசியமாகிறது. இதன் மூலம் நம்முடைய பால்வெளி மண்டலத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும். மேலும், வேறு சில நட்சத்திர திரள்களில் உள்ள நட்சத்திரங்களை நாம் தெரிந்து கொள்ள உதவும்.
சூரியனின் வெப்பம் மற்றும் காந்தவியல் நிகழ்வுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இதுகுறித்த ஆய்வுகளை ஒரு ஆய்வகத்தில் நிகழ்த்த முடி யாது. எனவே சூரியனை ஒரு ஆய்வகமாக கொண்டு இந்த ஆய்வுகள் நேரடியாக செய்யப்பட உள்ளது.
ஆதித்யா எல்-1 என்ற இந்த செயற்கைக் கோள் சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தில் விண் வெளியில் இருக்கக்கூடிய ஒரு கண்காணிப்பு ஆய்வகமாக செயல் படும். இந்த விண்கலமானது லி-1 என்று அழைக்கக் கூடிய சூரியனின் ஒளிவட்டப் பாதையில் உள்ள லெக்ராஞ்சே-1, அதாவது சூரியன் -பூமி சுற்றுப்பாதையில் உள்ள பகுதியாகும்.
இந்த தொலைவில் ஆய்வகம் செயல்படும்போது அதிலிருந்து கிடைக்கும் பயன் அதிகமாகும். மேலும் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் தொடர்ந்து சூரியனை கண்காணிக்கக் கூடிய சாதக அம்சம் உள்ளது. இது கிரகணங்கள் ஏற்படாத பகுதியாகும்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜோசப் லூயி லெக்ராஞ்சே என்ற கணிதம் மற்றும் வானியல் அறிஞர், பூமி, நிலவு, சூரியன் ஆகியவைகளின் ஈர்ப்பு விசையானது ஏதோ ஒரு புள்ளியில் சமநிலையில் இருக்கும் என்று கண்டறிந்தார். அவரது பெயரில் இந்த சுற்றுவட்டப் பாதை அழைக்கப்படுகிறது.
இந்த பாதையில் நிலைநிறுத்தப் படும் பொருட்கள் சம ஈர்ப்பு விசையுடன் சுழன்று வரும், பூமிக்கு முன் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்டப் பாதையை லி1 என்றும், பூமிக்கு பின்னால் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்று வட்டப் பாதையை லி2 என்றும் அழைக் கின்றனர்.
இந்த லி2-வில் தான் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நிலை நிறுத்தப்பட்டு சுற்றி வந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. லி1, லி2, லி3, லி4 மற்றும் லி5 என மொத்தம் அய்ந்து லாக்ரேஞ்ச் புள்ளிகள் உள்ளன.
சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்வெளி ஆய்வகமான(space-based Indian observatory) ஆதித்யா-எல்1அய் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. பெங்களூருவில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைக் கோள் மய்யத்தில் (யு.ஆர்.எஸ்.சி.) உரு வாக்கப்பட்ட செயற்கைக் கோள் ஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பிஎஸ்எல்விசி 57 ராக்கெட் மூலம் இந்த விண்வெளி ஆய்வகம் செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. 4 மாத கால பயணத்துக்குப் பிறகு 15 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லெக்ராஞ்சே-1 சுற்றுவட்டப் பாதையில் ஆதித்யா எல்-1 நிலை நிறுத்தப்படும்.
இந்த ஆய்வின் நோக்கம்
சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல் களின் தாக்கங்களை கண்டறிய முடியும். சூரிய வெடிப்பினால் ஏற்படும் சூரிய புயல் மற்றும் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் மேலும் அதன் வெப்ப மாறுபாடு குறித்தும் கண்டறிய முடியும்.
ஒருவேளை சூரியனில் ஏற்படும் வெடிப்புகள் பூமியை நோக்கி வரும் பட்சத்தில் அது என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்களில் குறிப்பாக பூமியின் விண்வெளி வானிலையில் எந்தவிதமான தாக் கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் நாம் அறிய முடியும்.
சூரியனின் துருவப் பகுதிகள் இதுவரை நன்கு ஆய்வு செய்யப் படவில்லை. எனினும், எதிர் காலத்தில் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் ஒன்றிணைந்து சூரியனை முழு மையாக ஆய்வு செய்ய முன் வரலாம்.
அதற்கு ஒரு தொடக்க புள்ளியாக இஸ்ரோவின் இந்த திட்டம் நிச்சயமாக உதவும்.
No comments:
Post a Comment