சென்னை, ஆக. 18- நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட் டிற்கும் எதிரானது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீட் தொடர்பாக, மாணவர் ஒருவரின் தந்தை எழுப் பிய கேள்விக்கு , ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பதில் விவாதப் பொருளா கியுள்ளது. `முடிவெடுக் கக் கூடிய இடத்தில் நான் இருந்தால் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒருபோ தும் ஒப்புதல் அளிக்க மாட்டேன்’ என அவர் கூறியுள்ளார். இது அரசியல் சட்டத்திற்கும், மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட் டிற்கு எதிரானதாகும்.
ஆளுநர் கூறுவது போல், மருத்துவக் கல்வி வணிகத்தை நீட் தடுத்திட வில்லை. உண்மையில் நீட்டிற்கும் மருத்துவக் கல்வி வணிகத்திற்கும் தொடர்பில்லை. நீட் மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கான ஒரு போட்டித்தேர்வு மட் டுமே. மருத்துவக் கல்வி வணிகமயமாவதற்கு அர சின் தனியார் மயமாக்கல் மற்றும் வணிக மயமாக் கல் கொள்கைகள்தான் காரணம். நியாயமான கட்டண நிர்ணயம், அதை கறாராக நடை முறைப் படுத்துதல், கட் டாய நன்கொடையை தடுத்தல், அரசு மருத்து வக் கல்லூரிகளை அதி கப்படுத்துதல் போன்ற வையே மருத்துவக் கல்வி வணிகமாவதை தடுக்கும். ஆளுநர் கூறுவது போல், `மருத்துவக் கல்வியில் நடைபெற்ற ரூபாய் 1000 கோடி வணிகத்தை’ நீட் தடுத்துவிட வில்லை.
மாறாக ஒன்றிய அர சின் தனியார் மயமாக்கல் கொள்கை மருத்துவக் கல்வி வணிகத்தை தற் போது பல ஆயிரம் கோடியாக அதிகரிக்கவே காரணமாயுள்ளது. நீட் அரசுப்பள்ளி மாணவர்க ளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர் களுக்கும்,கிராமப்புற மாணவர்களுக்கும், தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கும், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்க ளுக்கும், முதல்தலை முறை மாணவர்களுக்கும், ஏழை- எளிய குடும்பங்க ளைச் சேர்ந்த மாண வர்களுக்கும் எதிராக அமைந்தது. நீட் இல்லை எனில் ,தமிழ்நாட்டு மாண வர்களின் அறிவாற்றல் முடங்கி விடும் என ஆளு நர் கூறுவது, அறிவுத் தோற்றவியல் மற்றும் அறிவின் இயங்கியலுக்கு எதிரானது. நீட் இல்லாத பொழுது உருவாக்கப் பட்ட மருத்துவர்களும் திறமை மிக்கவர்களா கவே இருந்துள்ளனர் என்பதே வரலாறு. இவ் வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment