சிறீரங்கம் கோயிலில் பக்தர்கள் திடீர் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 8, 2023

சிறீரங்கம் கோயிலில் பக்தர்கள் திடீர் போராட்டம்

சிறிரங்கம், ஆக. 8 - ரங்கநாதர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பெரிய ராஜகோபுரம், ரங்கா ரங்கா கோபுரம், பெரிய திருவடி என்றழைக்கப்படும் பெரிய கருடாழ்வார், ஆரியபடாள் வாசல் மற்றும் அருகே உள்ள சிறிய திருவடி என்ற ழைக்கப்படும் கம்பத்தடி ஆஞ்சநேயர், கொடி மரம், நாழிகேட்டான் கடந்து பெருமாளைக் காண்பர்.

இக்கோயிலுக்கு கடந்த 2015இல் குடமுழுக்கு நடத்தப் பட்டது. அப்போது, சிறிய திருவடி என்றழைக்கப்படும் கம்பத்தடி ஆஞ்சநேயரை 5 அடி நகர்த்தி சுற்றி வலம் வந்து காணும் வகை யில் அமைக்கப்பட்டது.

இது ஆகம விதிகளுக்கு எதி ரானது என்று கூறி பொள்ளாச்சியை சேர்ந்த திருமால் அடி யார்கள் குழாம் ஒருங்கிணைப் பாளர் சீனிவாசன் என்பவர் தலைமையில் 120 பேர் கடந்த மார்ச் மாதம் சிறீரங்கம் கோயி லுக்கு வந்து கம்பத்தடி ஆஞ்சநேயர் தூண் அருகே அமர்ந்து பஜனை பாடல்கள் பாடி போராட் டம் நடத்தினர்.

இந்நிலையில் நேற்று  கோயி லுக்கு வந்த 50 பேர் கருடாழ்வார் சன்னதியில் கும்மியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த தாசில்தார் சிவக் குமார் மற்றும் காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பக்தர்கள் கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment