ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்தைக் கண்டித்து மக்களவை நடவடிக்கைகளை புறக்கணித்த எதிர்க்கட்சியினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கத்தைக் கண்டித்து மக்களவை நடவடிக்கைகளை புறக்கணித்த எதிர்க்கட்சியினர்

புதுடில்லி, ஆக. 12 - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அவை யில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி உறுப்பினர் கள் மக்களவை நடவடிக் கைகளை புறக்கணித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் 10.8.2023 அன்று பேசும்போது, "மன்னன் திருதிராஷ்டி ரன் பார்வையற்று அமர்ந் திருந்த போது, திரவுபதி யின் ஆடைகள் பறிக்கப் பட்டன. அதே போல் இன்று நம் அரசரும் பார் வையற்று அமர்ந்திருக்கி றார்" என்று விமர்சித்தார். இதையடுத்து, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பிரதமர் நரேந் திர மோடியை தரக்குறை வாக விமர்சித்ததாகக் கூறி அவரை இடைநீக்கம் செய்ய வகை செய்யும் தீர்மானத்தை அமைச்சர் பிரகலாத் ஜோசி கொண்டு வந்தார். குரல் வாக்கெ டுப்பு மூலம் அந்த தீர் மானம் நிறைவேறியது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரி வித்து 'இந்தியா' கூட்ட ணியில் உள்ள எதிர்க்கட் சிகள் மக்களவை நடவ டிக்கைகளை இன்று புறக்கணித்தன.

இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் காங் கிரஸ் கொறடா மாணிக் கம் தாக்கூர் குறிப்பிட்டுள் ளதாவது, "மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட் டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'இந்தியா' கூட்ட ணிக் கட்சிகள் மக்களவை நடவடிக்கைகளை புறக் கணித்துள்ளன. மேலும், மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவை ஒட்டி மக்களவை தலைவர் ஓம் பிர்லா அளிக்கும் தேநீர் விருந்தையும் புறக்கணிக்க நாங்கள் முடிவு செய்துள் ளோம். 23 கட்சிகளைச் சேர்ந்த 142 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளு மன்ற வளாகத்தில் உள்ள பி.ஆர். அம்பேத்கர் சிலையை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மல்லிகார்ஜூன கார்கே, "நாடாளுமன்ற உறுப்பி னர்களை ஆட்சியாளர் கள் தொடர்ந்து இடை நீக்கம் செய்கின்றனர். இதற்கு முன் இதுபோல் நடந்தது கிடையாது. இடைநீக்கம் செய்யப் பட்டதை அடுத்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாடாளு மன்ற ஆலோசனைக் குழு மற்றும் பிற நாடாளுமன் றக் குழுக் கூட்டங்களில் பங்கேற்கக்கூடாது எனும் நோக்கில் இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு பரிந்துரைத்து உள்ளனர். மோடி அர சின் சட்டவிரோத நட வடிக்கைக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள வைத் தலைவர் ஓம் பிர் லாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதேபோல், தன் மீதான குற்றச் சாட்டை நிராகரித்துள்ள ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தான் பிரதமரை தரக் குறைவாக விமர்சிக்க வில்லை எனத் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment