தருமபுரி, ஆக. 23- 17.08.2023 அன்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார் பில் நடைபெற்ற ,தருமபுரி மாவட்ட மக்களின் வாழ் வாதாரப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியும், காவிரி உபரி நீரை ஏரி களில் நிரப்பிட வலியுறுத் தியும், மேகதாதுவில் கரு நாடக அரசு அணை கட் டும் முயற்சியைக் கைவி டக் கோரி, ஒகேனக்கல் முதல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணம் மேற் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் இண்டூ ரில் திராவிடர் கழகம் சார்பாக வரவேற்பு அளிக் கப்பட்டது. மாவட்ட செயலாளர் பெ.கோவிந்த ராஜ் கருத்துரையாற்றி னார். மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் மா.செல்லத்துரை, பகுத் தறிவாளர் கழக மாவட்ட தலைவர் க.செந்தில் குமார், தொழிலாளர் அணி மாவட்ட அமைப் பாளர் அரங்க. கோவிந்த ராஜ் மற்றும் தோழமை இயக்கத்தவர் கள் மற்றும் பொது மக்கள் பெருந் திர ளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment