திருவனந்தபுரம். ஆக. 11- இந்திய அரசமைப்பு சட்டத்தின் 8ஆ-வது அட்டவணை யில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற ஒன் றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் 9.8.2023 அன்று கொண்டு வந்தார். தீர் மானத்தை சட்டப்பேர வையில் அறிமுகம் செய்து அவர் பேசியதாவது:
மலையாளத்தில் ‘கேரளம்’ என்ற பெயரி லும், பிற மொழிகளில் ‘கேரளா’ என்ற பெயரி லும் நமது மாநிலம் அழைக்கப்படுகிறது. ஆனால், நமது மாநிலத் தின் பெயர் அரசமைப்பு சட்டத்தின் முதல் அட்ட வணையில் ‘கேரளா’ என்றே எழுதப்பட்டுள் ளது.
எனவே, அரசமைப் பின் 3-ஆவது பிரிவின்கீழ் இதை ‘கேரளம்’ என்று திருத்தம் செய்து உடனடி பெயர் மாற்றத்துக்கு ஒன் றிய அரசு நடவடிக்கை எடுக்குமாறு இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. அரசியல மைப்பின் 8-ஆவது அட் டவணையில் குறிப்பிடப் பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத் தின் பெயரை ‘கேரளம்’ என இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், இத்தீர்மானம் ஒருமன தாக நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment