இன்று (6.8.2023) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான் 2023 பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக கழக இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட 1063 திருநங்கைகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கி வாழ்த்தினார். இவ்விழாவில், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், தி இந்து குழுமத்தின் இயக்குநர் என்.ராம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் ஜே.ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை, ஆக. 6 - கலைஞர் நூற் றாண்டு பன்னாட்டு மாரத்தான் போட்டியை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி இன்று (6.8.2023) சென்னையில் கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
73,206 பேர் பங்கேற்ற இந்த மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித் துள்ளது. தொடர்ந்து, சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்க ளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பரிசுத் தொகையை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, நான் குறிப்பிட்டு காட்டியது போல, இந்த ஆண்டு, கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத் தான் போட்டியில், 73 ஆயிரத்து 206 பேர் கலந்து கொண்டு இருக் கிறார்கள்.
இந்தப் போட்டி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. கலை ஞர்னாலே கின்னஸ் சாதனை தான். பல்வேறு வெளிநாட்டு தூதர்கள் வருகை தந்திருக்கிறார்கள். எனவே இது சாதாரண மாரத்தான் அல்ல, இது சமூகநீதி மாரத்தானாக அமைந்திருக்கிறது. நாம் எதைச் செய்தாலும், அதிலே ஒரு பெரிய சிறப்பு இருக்கும், பெருமை இருக்கும், பூரிப்பு இருக் கும், மகிழ்ச்சி இருக்கும், எழுச்சி இருக்கும், எல்லாவற்றையும் தாண்டி புதுமையும் இருக்கும், புரட்சியும் இருக்கும், அதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. மாரத்தான் ஓட்டம் என்பது உடல் உறுதிக்கு மட்டுமல்ல, உள்ள உறுதிக்கும் அடித்தளமாக அமையும்.
நம்மை சுறுசுறுப்பாக வைத்தி ருக்கும். கூட்டுச் செயல்பாட்டை வலியுறுத்தும். இப்படியான போட்டிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும். உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக, ஆனபிறகு, விளையாட்டுத் துறை மேலும் பல மடங்கு எழுச்சி பெற்றிருக்கிறது. உலகப் புகழ் பெற்ற போட்டிகள் நடக்கும் மாநிலமாக, ஏற்கெனவே சதுரங்கப் போட்டியை நடத்தி னோம், இப்போது ஹாக்கி போட் டியை நடத்திக் கொண்டிருக்கி றோம். இதுபோன்ற பல போட்டி களை நடத்துவதற்கான முயற்சி களை அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. இது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஏராளமான புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் இது பயன் படுகிறது. அனைத்திலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் எண்ணினார். அந்த எண்ணம் இன்றைக்கு ஈடே றிக்கொண்டு இருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment