தங்கள் இலக்கின் மீது கொண்டிருந்த மனஉறுதிதான் சாதாரண மனிதர்கள் பலரை சாதனைச் சிகரத்தில் அமரச் செய்தது. எல்லாவற்றிற்கும் மேலாக மனஉறுதியால் மரணத்தையே தள்ளிப் போடலாம் என்று சாதித்துக் காட்டியவர் தான் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்.இரண்டே ஆண்டுகளில் இறந்து விடு வார் என்று மருத்துவர்களால் கணிக்கப் பட்ட அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹக்கிங்ஸ் பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார் என்றால் அவர் மரணத்தை பற்றி பயம் கொள்ளாமல் தன் மன உறுதியின் மேல் நம்பிக்கை கொண்டு இருந்ததே, அப் படி இளம் வயதிலே தனக்கு ஏற்பட்ட நோயிலிருந்து மீண்டு மன உறுதியின் மூலமாக தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வென்று சாதித்தவர்தான் ஷிவானி சாரக்.
ஜம்முவை சேர்ந்த 18 வயதான ஷிவானி, இந்தியாவின் முன்னணி ஏறுதல் விளையாட்டு (ஸ்போர்ட்ஸ் கிளைம்பிங்) வீராங்கனையாக பல தடைகளை தாண்டி சிகரங்களை அடைந்து சாதித்துள்ளார். ஜம்முவில் பிறந்து வளர்ந்த ஷிவானிக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கின்றனர்.
பள்ளியில் டேக்வாண்டோ பயிற்சி பெற்றாலும் அதில் தீவிர ஆர்வம் கொண்டிருக்கவில்லை. 2009இல் ஷிவானிக்கு 9 வயதாக இருந்த போது சோதனை ஆரம்பமானது.அன்றைய தினம் புத்தாண்டு மற்றும் அவருடைய சகோதரர் பிறந்தநாள் குடும்பமே கொண்டாட்டத்தில் இருந்த போது, ஷிவானிக்கு தாங்க முடியாத கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அவர் அழுவதை பார்த்த சகோதரி பதறியடித்து அவருடைய பெற்றோரிடம் தெரி வித்தார். அதன் பிறகு மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். மருத்துவர் மேல் சிகிச்சைக்கு சண்டிகர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தார். அங்கு தீவிர பரிசோத னைகளுக்கு பிறகு ஷிவானிக்கு புற்று நோய் இருப்பது உறுதி செய்யப் பட்டது. குடும்பமே துயரத்தில் ஆழ்ந்தது. தனக்கு புற்றுநோய் இருப்பதை கேள்விப்பட்ட ஷிவானி மிகுந்த வேதனை அடைந்தார். இருந்த போதும் சிகிச்சைகள் மூலமாக நோயி லிருந்து மீண்டு விடலாம் என்று அவருடைய தந்தை ஆறுதல் அளித்தார். அதன் பிறகு சிகிச்சையும் துவங்கியது.
இத்தகைய தருணங்கள் மிகுந்த சோதனைக் காலமாக அமைந்தது ஷிவானிக்கு, இருந்தபோதும் மனம் தளரவில்லை.நோயிலிருந்து மீண்டு விடலாம் என்ற நம்பிக்கை தொடர்ந் தது. நம்பிக்கையின் பலனால் மன உறுதியால் தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு 2012இல் அவர் புற்றுநோயில் இருந்து விடுபட்டுவிட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தார்கள். குடும்பமே மகிழ்ச்சி அடைந்தது. ஷிவானி பள் ளிக்கு செல்லத் துவங்கினார்.பள்ளியில் படிக்கும் போது ஏறுதல் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. இது ஒரு கடின மான விளையாட்டாகும். மலைப் பாறையில் பாதுகாப்பிற்காக ஆங்கர் கள் பொறுத்தப்பட்டிருக்கும். அதிருந்து ஒரு கயிறு ஏறுபவர் மீதும் பொருத்தப் பட்டிருக்கும்.அதன் பிறகு சுவர் மீது ஏற வேண்டும். முதன் முதலாக அவர் பள்ளியில் உள்ள 4 மீட்டர் சுவரில் ஏறத் துவங்கினார். துவக்கத்தில் அவரது உடல் நிலை தடையாக இருந்தாலும், டாக்டர் அனுமதி கொடுத்தால் தொடர்ந்து இதில் ஈடுபடலாம் என அவரது தந்தை ஊக்கம் அளித்தார்.
மெல்ல மெல்ல ஷிவானி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கத் துவங்கி ஒவ்வொன்றிலும் வெற்றி பெற்றார் .ஜம்மூவில் ஏறுதல் விளையாட்டிற்கு சரியான பயிற்சிகள் கிடைக்கவில்லை. அதனால் பல சவால்களை அவர் எதிர் கொண்டார். உள்ளூரில் பயிற்சி எடுக்க மிகவும் சிரமப்பட்டார்,ஒரு ஏறும் சுவர் தவிர, ஷிவானிக்கு போதிய பயிற்சி வசதிகள் ஜம்முவில் கிடைக்க வில்லை. இந்த நிலையில் ஏறுதல் விளையாட்டில் தொடர் வெற்றி பெற்றதன் காரணமாக இந்திய ராணுவ வீரர்கள் மூலமாக பயிற்சி பெறும் வாய்ப்பை பெற்றார்.
பன்னாட்டு அளவில் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தினமும் ஏறுதல் விளையாட்டுக்கான பயிற்சியு டன், கடுமையான உடற் பயிற்சியும் செய்தார். அதன் பலனால் பெங்களூருவில் நடைபெற்ற ஆசிய இளைஞர் வாகையர் பட்டப் போட்டி யில் வெண்கலம் வென்றார். 2015ஆம் ஆண்டு தேசிய போட்டியில் பங்கு பெற்று தங்கம் வென்றார். 2016இல் உலகக் கோப்பையில் பங்கேற்றார். ஜம்முவில் உள்ளூரில் நடைபெற்ற போட்டி முதல் பன்னாட்டுப் போட்டி வரை வென்று சாதித்து உள்ளார். ஒலிம்பிக் போட்டி யில் தங்கம் வென்று சாதிக்க வேண்டும் என்பதே தன் னுடைய உயர்ந்த இலக்காக கொண்டு உள்ளார் ஷிவானி.
பெண்விளையாட்டு வீராங்கனை களை ஊக்கப்படுத்தும் வெல்ஸ்பனின் சூப்பர் ஸ்போர்ட்ஸ்வுமன் திட்டம் இப் போது ஷிவானியை ஆதரித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் ஆதரவு காரண மாக ஷிவானி பல போட்டிகளில் பங்கேற்று,மேலும் பல வீராங்கனைகளை சந்திக்கும் வாய்ப்பு மற்றும் பன்னாட்டுப் பயிற்சியும் பெற்றுள்ளார்.இளம்வயதில் கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட் டிருந்த போதும் மனஉறுதியால் அந்த நோயை வென்று புதுமையான ஏறுதல் விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத் திக் கொண்டு கடுமையான பயிற்சி களை மேற்கொண்டு தேசிய அளவில் சாதித்து வருகிறார் ஷிவானி.மன உறுதி தான் வெற்றிக்கான முதல் தேவை என்பதுதான் இவருடைய வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
No comments:
Post a Comment