சென்னை, ஆக.3- திரா விடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது குறித்து இந்திய கம்யூ னிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வரு மாறு:
தமிழ்நாடு அரசின் உயரிய விருதான 'தகைசால் தமிழர்' விருது, இந்த ஆண்டு திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
திராவிடர் கழக தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இளம் வயதி லேயே பொது வாழ்க்கை யில் அடியெடுத்து வைத்து தந்தை பெரியாரை பின்பற்றி தொடர்ந்து பகுத்தறிவு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருபவர். நாற்பது முறை சிறை வாசம், 60 ஆண்டுகள் இடைவிடாத பத்திரிகை பணி, ஓய்வில்லாத இயக் கப்பணி என்று இயங்கி வருகிறார். 90 வயதிலும் சுறு, சுறுப்புடன் இயங்கி வருவதோடு, இந்திய நாட்டை அச்சுறுத்தி வரும் சனாதன மதவெறி சக்திகளை எதிர்த்து உறு தியாக களம் கண்டு வருகிறார்.
விருதுபெரும் திரா விடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு சி.பி.அய். (எம்) மாநில செயற்குழு மனமார்ந்த வாழ்த்துக் களையும், பாராட்டுக் களையும் தெரிவித்துக் கொள்வதோடு, இத் தகைய சிறந்த பண்பாள ருக்கு இந்த விருதை அளிக்கவுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களுக்கு சிபிஅய் (எம்) நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் கோ. பால கிருஷ் ணன் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment