சென்னை, ஆக. 28- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தொடங் கப்பட்ட நாளிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புதிய அமைப்பு ஒன்று தொடங்கி ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வழிவகுங்கள், பல்வேறு தரப் பினரை அழைத்து ஆங்கிலத் தில் நூல்களைத் திறனாய்வு செய்யச் சொல்லுங்கள். உரை கள் விவாதங்கள் என நிகழ்ச்சி களைச் சுவையாகக் கொண்டு செல்லுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அது மட் டுமல்ல, நிறைய இளைஞர்கள் பங்கேற்பதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தாருங்கள் என்று சொல்லுவார்.
பல நாட்களாகத் திட்ட மிட்டு நேற்று (27.8.2023) முதல் நிகழ்ச்சியாக ஆங்கில இலக் கியப் பிரிவு தொடங்கப்பட்டது. மிகவும் சிறப்பாக அரங்கு நிரம்பி வழியும் அளவிற்கு நண்பர்கள் வந்திருந்தார்கள்.
அய்ன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஆலடி எழில்வாணன் சிறப்பு விருந்தி னராகக் கலந்து கொண்டு அமைப்பைத் தொடங்கி வைத் தார். அவர் உரையில் பகுத்தறிவு கருத்துகளை, குறிப்பாக, தந்தை பெரியாரின் கருத்து களை, அடுத்த தலைமுறைக்குக் கடத்த, ஆங்கிலம் வழியாகக் கொண்டு செல்வதன் அவசி யத்தை எடுத்துரைத்தார். தேவைப் பட்டால் ஹிந்தியில் கூட நிகழ்ச்சி நடத்துவது தவறில்லை என்றார். பிரபல பத்திரிகையா ளர் கட்டுரையாளர் ஏ.எஸ் பன்னீர்செல்வன் பொருளா தார நிபுணர் ஜெயரஞ்சன் எழுதிய "எ திராவிடியன் ஜர்னி" என்ற ஆங்கில புத்தகத்தைத் திறனாய்வு செய்தார். அவரைத் தொடர்ந்து ஜெர்மனி நாட் டைச் சார்ந்த சுபாஷினி 'ஜெர் மன் டமிலாலஜி' என்ற புத்தகத் தைத் திறனாய்வு செய்தார். மேலும், புதிதாகத் தொடங் கப்பட்ட ஆங்கில இலக்கிய அமைப்பைக் குறித்துப் பேசுகையில், தமிழ்ச் சூழலில் ஆங்கில நூல் திறனாய் வுகளை ஆங்கிலத்திலேயே நடத்தும் இந்த முயற்சி வர வேற்கத்தக்க ஒன்று. இதே போல ஜெர் மானிய, பிரெஞ்சு, இத்தாலி, ஸ்பானிஷ், சீன, கொரிய மற்றும் ஜப்பானிய என பல மொழிகளில் தமிழ், தமிழ் வரலாறு தொடர்பான கலந்து ரையாடல்கள் நிகழ்த் தப்பட வேண்டிய தேவை இன் றைக்கு உள்ளது' என்றார்.
நிகழ்ச்சியின் தொடக்கத் தில் எட்டு வயது சிறுமி சோபித்தா அனைவரின் கவ னத்தையும் பாராட்டையும் பெறும் வகையில் ஆங்கிலத்தில் சிறுகதை ஒன்றைச் சொன்னார். வரவேற்புரையும், அமைப்பின் நோக்கத்தையும் குறித்துப் பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் கோ. ஒளி வண்ணன் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் பகுத் தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் செல்வ மீனாட்சி சுந்தரம் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியினை சென்னைப் புத்தகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜாய்சி, கிருபா மற்றும் பிரேம் ஒருங்கிணைத்தனர். பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
75% புதியவர்கள்
இத்தொடக்க விழா பல் வேறு சிறப்புகளைக் கொண்டு அமைந்தது. ஒன்று, நிகழ்ச்சி முழுவதும் தொடக்கத்திலி ருந்து இறுதிவரை ஆங்கிலத்தி லேயே நடத்தப்பட்டது. இரண் டாவதாக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் 75% புதிய வர்கள். அதில் 50% இளைஞர் கள். குறிப்பாக இளம் பெண் கள் ஏராளமாகக் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியும் நிகழ்ச்சி முடிந்தவுடன் ஏராள மான அறிஞர் பெருமக்களிடம் கேள்வி கேட்க விளக்கம் பெற் றது கூடுதல் சிறப்பு. தொடர்ந்து இதுபோல நிகழ்ச்சி நடத் துங்கள் வருகிறோம் என்று இளைஞர்கள் உறுதியளித்த தும், விருந்தினர்களுடன் சுயமி (sமீறீயீவீ) எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தும் நிகழ்ச்சிக்கு முத்தாரமாக அமைந்தது. எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக, நிகழ்ச்சி குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் முடிவடைந் தது.
நிகழ்ச்சியில் பார்வையாள ராக கலந்து கொண்ட 'எ திரா விடியன் ஜர்னி' நூலாசிரியர் தமிழ்நாடு திட்டக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஜெய ரஞ்சன் பார்வையாளர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி மேடை ஏறினார். 'ஏற்றத்தாழ் வுகள் அற்ற சமூக கட்டமைப் புக்கு மானியங்கள் ஆற்றும் மகத்தான பங்கு' என்ற ஆழ மான பொருளாதார தத்து வத்தை எளிமையாக எடுத்து ரைத்தார். சுவையான உணவு உட்கொண்டவர்கள் இறுதி யில் அய்ஸ்கிரீம் சாப்பிட்டது போல அமைந்தது இவ்வுரை.
பொருளாதார தத்துவம்
ஒவ்வொரு மாதமும், இறுதி ஞாயிற்றுக்கிழமை மாலை, இந் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. அனைவரும் தாங்கள் கலந்து கொள்வதோடு மட்டுமின்றி, தவறாது தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் குடும்பத்திலுள்ள இளைய தலை முறையினர் கலந்து கொள்ள உதவி செய்ய வேண்டும். இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும், நூல்களைத் திறனாய்வு செய்ய வேண் டும் என்று விரும்புபவர்கள் கோ. ஒளிவண்ணன் (+919840037051) அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் மற்ற விவரங்கள் பின்னர் அளிக்கப்படும்.
No comments:
Post a Comment