ஜெய்ப்பூர்,ஆக.8 - ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் பகுதியை சேர்ந்த பிரதாப் சிங் ராஜ்கோட் எனும் 70 வயது முதியவர் மது போதையில் தன்னை சிவபெருமானின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டு 85 வயது மூதாட்டியை அடித்து கொலை செய் துள்ளார்.
அவர் அந்த மூதாட்டியை கொன்ற பிறகு மீண்டும் உயிர்பிக்கலாம் என்று நினைத்துள்ளார். தர்பால் கிராமத்தில் உள்ள மகாதேவர் கோவிலின் அருகே வைத்து அவர் அந்த மூதாட்டியை குடையால் தாக்கியும், கால்களால் மிதித்தும் கொலை செய்துள்ளார்.
இது தொடர்பான அதிர்ச்சி யூட்டும் காணொலி சமூக வலை தளத்தில் வைரலாக பரவியதை அடுத்து பிரதாப் சிங்கை காவல்துறையினர் கைது செய்ததோடு காணொலியைப் பதிவு செய்தவர் களையும் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment