சமூக அநீதியைச் சாய்த்திட வாரீர்!
ஒன்றிய அரசின் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்த மண்டல் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது.
அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்தே ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 22.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால், 45 மத்தியப் பல்கலைக் கழகங்களில் 4 சதவிகிதம்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினைச் சார்ந்த பேராசிரியர்கள் உள்ளனர்.
எடுத்துக்காட்டாக, நிரப்பப்பட்டுள்ள 1341 பேராசிரியர் பணியிடங்களில் 27% பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின்படி 362 பேர் இடம் பெற்றிருக்கவேண்டும். ஆனால், 60 பேருக்கு மட்டுமே (4% மட்டுமே) பணி வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் 15% இடஒதுக்கீட்டின்படி 201 தாழ்த்தப்பட்டோர் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 96 பேர் (7%) மட்டுமே தாழ்த்தப்பட்டோர்.
பழங்குடியினர் 7.5% இடஒதுக்கீட்டின்படி 100 பேர் இருக்கவேண்டும். ஆனால், 22 பேர்தான் (1.6% மட்டுமே) நியமிக்கப்பட்டுள்ளனர். இதேநிலைதான் பிற பணிகளிலும் உள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டாமா?
உரிமைகளை வென்றெடுக்கத் தமிழர் தலைவர் அழைக்கிறார்.
இளைஞர்களே, மாணவர்களே போராட்ட களம் வாரீர்!
நாள்: 12.8.2023 சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை
தலைமை:
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
கண்டன உரை:
வீ. குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)
வழக்குரைஞர் அ. அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)
கோ. கருணாநிதி (வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம்)
No comments:
Post a Comment