* தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கோ.முருகன் தனது குடும்பத்தாருடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து சால்வைக்கு பதிலாக ரூ300 நன்கொடை வழங்கினார். (08.08.2023,பெரியார் திடல்)
* திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ. 500 வழங்கினார். மாவட்டச் செயலா ளர் தே.ஒளிவண்ணன், தொ. பரமசிவன் எழுதிய ”தென்புலத்து மண்பதை” புத்தகத்தை வழங்கினார். உடன்: காப்பாளர் ஓவியர் பெரு.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் தி.செ. கணேசன், வாசு ஆகியோர். (8.8.2023, பெரியார் திடல்)
* வேலூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் தேன்மொழி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, "உயிர் வலி" எனும் புத்தகத்தையும், விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 1,000மும் வழங்கினார். (9.8.2023,பெரியார் திடல்)
* ஓசூர் மாவட்ட மகளிரணித் தலைவர் செல்வி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூபாய் 500 வழங்கினார். (9.8.2023,பெரியார் திடல்)
* தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா. ரங்கநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர் களுக்கு பயனாடை அணிவித்து "பெரியா ரும் காட்சிப்படுத்துதலின் அவசியமும்" எனும் புத்தகத்தை வழங்கினார். (9.8.2023, பெரியார் திடல்)
* தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு "தகைசால் தமிழர் விருது" அறிவுத்துள்ளத்தின் மகிழ் வாக சென்னை பல்கலைக்கழக திராவிட ஆய்வு மய்ய ஒருங்கிணைப்பாளர் கூ.வ. எழிலரசு, ஆசிரியர் அவர்களை சந்தித்து பய னாடை அணிவித்தார். (10.08.2023,பெரியார் திடல்).
* ஓமன் நாட்டில் பணிபுரியும் சீனி வாசகம் ராமசாமி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து விடுதலை வளர்ச்சி நிதி ரூ.500/- வழங்கினார். உடன்: வேலூர் மாவட்ட மகளிர் அணித் தலைவர் தேன்மொழி.(9.8.2023, பெரியார் திடல்).
* தமிழ்நாடு அரசின் சார்பில் தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ள திரா விடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில ஆதிதிராவிட நலக்குழு துணைச் செயலாளரும், அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவருமான அரூர் சா. இராஜேந்திரன் சந்தித்து பயனாடை அணிவித்தார். (8.8.2023, பெரியார் திடல்)
* தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு தமிழ்நாடு அரசு "தகைசால் தமிழர் விருது" அறிவித்துள்ளதற்கு "கலைஞர் அறக் கட்டளை அமெரிக்காவின்" இயக்குநர் நியூ ஜெர்சி பாலா கிருத்திகா, ஆதவன், குழலினி ஆகியோருடன் உடன் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment