மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவே வராதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 11, 2023

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவே வராதா?

ஒன்றிய நிதியமைச்சரை நோக்கி 

தி.மு.க. எம்.பி.க்கள் சரமாரியான கேள்விகள்

புதுடில்லி ஆக 11  மக்களவையில் பிரதமர் மோடி அரசின் மீதான நம் பிக்கையில்லா தீர்மானத் தின் மீதான விவாதத்தின்  போது, திமுக எம்பி.க்கள் 5 ஆண்டுகளாகியும் மது ரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் உள் ளது. மதுரையில் எய்ம்ஸ் எப்போ வரும் என்று கூறி முழக்கமிட்டனர். இதற்கு பதிலளித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: நிலம் கையகப்படுத்துவதை தமிழ்நாடு அரசு தாமதித்ததால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் செலவு ரூ.1,200 கோடியில் இருந்து ரூ.1,900 கோடியாக அதிகரித் துள்ளது.

எனவே, இந்த தாமதத் திற்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும். கரோனா கால கட்டத்தில், நிலத்தை கையகப்படுத்துவ தற்கான ஆய்வுப் பணி களை மேற்கொள்ள முடியாது என்று மாநில அரசு கூறியது. இதன் விளைவாக தற்போது எய்ம்ஸ் கட்டும் பணி தாமதமாகிறது. மாநில அரசுக்கு இருக்கும் பிரச் சினைகளை புரிந்து கொள்ள முடிகிறது. 

மூத்த உறுப்பினரான டி.ஆர். பாலு, ஜப்பானிடம் இருந்து கடன் பெறுவது பிரதமருக்கு அவமானமாக இல்லையா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மதுரை யில் எய்ம்ஸ் கட்டுவ தற்கான மொத்த செலவு ரூ.1,977.80 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. கடன் தொகை ரூ.1,627 கோடி.

இதற்கு முன்பு மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு ஜப் பானிடம் இருந்து ஒன்றிய அரசு கடன் பெற்றது. எய்ம்ஸ் கட்டுவது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் திட்டம் என்பதால், ஒன் றிய அரசே முழு கடனுக்கும் பொறுப்பாகும். எனவே இது குறித்து தமிழ்நாடு அரசு கவலைப்பட தேவையில்லை. இதனால் மாநில அரசுக்கு நிதிச் சுமை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார். மதுரை யில் எய்ம்ஸ் எப்போது திறக்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தனது பதிலில் எதுவும் குறிப்பிடவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.பி.க்கள் எப்போ, எப்போ என்று முழக்கமிட்டபடி அவை யில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


No comments:

Post a Comment