புதுடில்லி, ஆக. 5- வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா வந்து படிப்பதை எளிதாக்கும் வகையில் இணையதளம் ஒன்றை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது.
பன்னாட்டு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்திய பல்கலைக்கழங்களில் படிப்பதை எளிதாக்கும் வகையில் https://studyinindia.gov.in/ என்ற இணையதளத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் 3.8.2023 அன்று தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: இந்தியாவை உலகளாவிய கல்வி மய்யமாக ஆக்கும் நோக்கத்துடன் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல பின்னணியைச் சேர்ந்த மாணவர்களை இந்தியாவில் படிக்கவைக்க முடியும். கல்வியில் இந்தியா பன்னாட்டு தடம் பதிக்கவும் இந்த நடவடிக்கை உதவும். இந்த இணையதளம் மூலம் வெளிநாட்டு மாணவர்கள், விசா அனுமதிக்கு எளிதாக விண்ணப்பிக்க முடியும். சம் பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில், வெளிநாட்டு மாண வர்கள் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுக்கும் முறைகளை இந்த இணையதளம் எளிதாக்குகிறது. வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் படிப்பதால் உள்நாட்டு மாணவர்களும் பயனடைவர். இது வெளிநாட்டு மாணவர்களுடனான தொடர்பை எளிதாக்கும். உலகளாவிய சூழலில் பணிபுரிய இந்திய மாணவர்களை தயார்படுத்தும்.
பிறநாட்டு மாணவர்கள் இந்தியாவில் படிப்பதன் மூலம், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் சிந்தனை கள் பற்றி பரஸ்பர புரிதல் ஏற்படும்.வெளிநாட்டு மாணவர் கள், இந்தியாவில் படித்துவிட்டு தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது, அவர்கள் இந்தியாவின் நல் லெண்ண தூதர்களாக மாறுவர். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
No comments:
Post a Comment