தமிழ்நாடு காவல்துறை நலனுக்காக சமூக வலைதளக் குழுமம் - சங்கர் ஜிவால் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 22, 2023

தமிழ்நாடு காவல்துறை நலனுக்காக சமூக வலைதளக் குழுமம் - சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை, ஆக. 22 - தமிழ்நாடு காவல் துறை நலனுக்காக கடைசி யில் உள்ள காவலர் வரை பயன் பெறும் வகையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து செயல்பட தமிழ் நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தர விட்டுள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

தமிழ்நாடு காவல்துறை நலன்  (Tamilnadu police welfare) என்ற பெயரில் உருவாக்கப்படும் வாட்ஸ் அப்குரூப்பில் காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட தலைமை அதிகாரிகள் இருப்பார்கள்.

சென்னையை பொறுத்தவரையில் இணை ஆணையர் வெல்ஃபேர் தலை மையில் வாட்ஸ் அப் குரூப் அமைத்து அதில் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்க வேண்டும்.  

அதன்பின் துணையான இவர்கள் தலைமையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து அதில் உதவி ஆணையர் கள் ஆய்வாளர்கள் இருக்க வேண்டும்.

உதவி ஆணையர்கள் தலைமை யில் அமைக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என கடைசி காவ லர்கள் வரை இருக்க வேண்டும். மற்ற நகரங்களை பொருத்த வரையில் துணை ஆணையர் தலைமையில் வாட்ஸ் அப் குரூப் அமைக் கப்பட்டு உதவி ஆணையர்கள் ஆய் வாளர்கள் இருக்க வேண்டும். 

மாவட்ட அளவில் ஏடிஎஸ்பி தலை மையில் வாட்ஸ்அப் குரூப் அமைக்கப்பட்டு அதில் டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் இருக்க வேண்டும். 

மற்ற நகரங்களிலும் மற்றும் மாவட்டங்களிலும் ஆய்வாளர்கள் தலைமையில் வாட்ஸ்அப் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் கீழ் கடைசி காவலர்கள் வரை இணைக்கப்பட வேண்டும்.

இவ்வாறாக அமைக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து காவல் துறை நலன் சார்ந்து பதிவிடப்படும் பதிவுகள் மூலமாக உடனடியாக சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் தலைமை அதி காரிகள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்க்கு பதிவுகள் அனுப்பப்பட வேண்டும்.  

தலைமை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடப் படும் காவலர் நலன் சார்ந்த பதிவுகள் உடனடியாக 30 நிமிடத்தில் அடுத் தடுத்த வாட்ஸ் அப் குரூப்பில் அனுப் பப்பட வேண்டும். 

நான்கு மணி நேரத்திற்குள் அனைத்து காவலர்களும் அறிந்து கொள்ளும் வகையில் வாட்ஸ்அப் குரூப்களில் அது சென்றடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment