பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேருவின் மாமனாரும், துணைவியார் நே.சொர்ணத்தின் (BSNL TSO(RTD) தந்தையாருமான இரா.சங்கரலிங்கம் (வயது 84) 23-08-2023 அன்று காலை 4 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
இரா.சங்கரலிங்கம் அவர்கள் தொலைத்தொடர்புத் துறையில் SI Phones ஆக பணியாற்றி பணி நிறைவு பெற்றதோடு NEPTE சங்கத்தின் மாநில பொருளாளராக செயலாற்றியவர். FNTO வின் மாவட்ட தலைவராக பணி செய்தவர்.
சில நாள்கள் முதுமையால் உடல் நலம் குன்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவருக்கு துணைவியார் கமலவேணி, மகள்கள் நே.சொர்ணம், பிச்சையம்மாள், செல்வலட்சுமி, பிரியா ஆகியோர் உள்ளனர்.
தலைமைக் கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மாவட்ட செயலாளர். சுப.முருகானந்தம் மற்றும் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் இரா.சங்கரலிங்கனார் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
அன்னாருக்கு மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வீரவணக்கத்தையும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment