மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி திடீர் பதவி விலகல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி திடீர் பதவி விலகல்

மும்பை, ஆக. 5- மும்பை உயர் நீதிமன் றத்தின் நாக்பூர் பெஞ்சில் இரண்டாவது மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி ரோஹித் பி டியோ தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ரோஹித் பி டியோ, விசாரணையின் போது திறந்த நீதிமன்றத்தில் பதவி விலகுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சி யடையச் செய்தார்.

பொதுவாக, உயர் நீதிமன்ற நீதிபதி பதவி விலகுவது அல்லது ஓய்வு பெறு வதில் பல சம்பிரதாயங்கள் கடைப் பிடிக்கப்படும். ஏனென்றால் அந்த மாதிரியான சமயங்களில் அவர்களுக்கு என்று விழா ஏற்பாடு செய்யப்பட்டு, மிகுந்த மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்படுவர்.

இந்த நிலையில், திறந்த நீதிமன்ற அறையில் அனைத்து வழக்குரைஞர் களும் இருக்கும் போது, நீதிபதி ஒருவர் தனது பதவி விலகலை அறிவித்தது இதுவே முதல் முறையாகும். உயர் நீதி மன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் பணி புரியும் ரோஹித் பி டியோ, தனது பதவி விலகல் செய்தியை அறிவித்துவிட்டு, அங்கிருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். உங் களை என் குடும்பமாக நினைத்துதான் உரிமை யோடு பலமுறை கடிந்து கொண்டிருக்கிறேன். என்னால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக எனது வருத்தத் தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். எனது சுயமரி யாதைக்கு எதிராக என் னால் செயல்பட முடி யாது. அதனாலேயே பதவி விலகு கிறேன் என்று கூறினார். அப்போது இது   செய்தது தொடர்பாக வேறு எந்த விளக்கத் தையும் அவர் அளிக்க வில்லை.

மாவோயிஸ்ட் தொடர்புகள் தொடர்பான வழக்கில் பேராசிரியர் ஜிஎன் சாய்பாபாவை கடந்த 2022 ஆண்டு பி தேவ் விடுதலை செய்தார். இதையடுத்து,  இந்த உத்தரவிற்கு தடை விதித்த உச்ச நீதிமன்றமும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதி மன்றத்தின் நாக்பூர் அமர்வுக்கு உத்தர விட்டது. நீதிபதி ரோஹித் பி டியோ 2017ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி யாக உயர்த்தப்பட்டார்.

நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்தார். உயர் நீதிமன்றத் தின் நாக்பூர் பெஞ்சின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் இருந்துள்ளார். பி தேவ் டிசம்பர் 4, 2025 அன்று ஓய்வு பெற இருந்தார்.

ஆனால் அவர் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே தனது பதவியை விட்டு விலகியுள்ளார். சமீபத்தில், நீதி பதி ரோஹித் பி டியோ தலைமையிலான பெஞ்ச், சம்ரிதி எக்ஸ்பிரஸ்வே திட்டத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரர் களுக்கு எதிரான தண்டனை நடவடிக் கைகளை ரத்து செய்ய மகாராட்டிரா அரசுக்கு அதிகாரம் அளிக்கும் அரசு தீர்மானத்திற்கு தடை விதித்தது குறிப் பிடத்தக்கது. 

No comments:

Post a Comment