தகைசால் தமிழருக்கு தலை வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

தகைசால் தமிழருக்கு தலை வணக்கம்!

இன்றொரு செய்தி

எம் காதில் விழுந்தது

எல்லையில்லா மகிழ்ச்சியின்

இன்பத் தேனில் இதயம் குதித்தது

அடடா... ஆனந்தம்! ஆனந்தம்!!

அளவிட முடியாத ஆனந்தம்! ஆனந்தம்!!

நம் தலைவருக்கு

"தகைசால் தமிழர் விருது"

தமிழ்நாடு அரசின் அறிவிப்பு

அகிலத் தமிழர் நெஞ்சமெலாம்

அலைக் கடலென ஆர்ப்பரிப்பு

அறிவுலகத்துக்கோ பூரிப்பு!

அய்யா அடையாளம் காட்டினார்

அரும் தொண்டின் மூலம் நிலை நாட்டினார்


தொண்ணூறிலும் எண்பதாண்டு தொண்டு

இதில் இவருக்கு இணை யாருண்டு?

தொட முடியாத உயரத்தில் ஏறினார் 

பெரியாரை உலகமயமாக்கினார்

பிஞ்சுகளுக்கு ஈரோட்டுப்பால் ஊட்டினார்

பெரியாருக்குப் பின்பு இயக்கம்

பெரும் படை வரிசையின் தாக்கம்!

பிறந்தால் இவரைப் போல் அல்லவா

பிறக்க வேண்டும்

பெருமைகள் மலைபோல்

குவிய வேண்டும்

ஆனாலும்  அடக்கத்தின்உச்சம்

யார் வருவார் ஆசிரியர் பக்கம்?

சமூக நீதிக்கான சரித்திர நாயகர்

மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர்

மு.க. ஸ்டாலின் நெஞ்சத்தராசில்

எடை கண்டவர் நம் தலைவர்

நன்றி என்ற சொல் சாதாரணமானது

நானிலமே மாலை சூடும்

நம் முதலமைச்சர் பெருமகனாருக்கு!

மலையும் குனிந்து வணக்கம் கூறும் 

மன்பதையாளும் தலைவருக்கு

திராவிடம் வெல்லும்

நாளை உலகம் அதை சொல்லும்!

வெல்லட்டும் திராவிடம்!

வீழட்டும் ஆரியம்!!

பாலக்காடு - 1.8.2023


கவிஞர் கலி. பூங்குன்றன்


No comments:

Post a Comment