அன்றாடம் காலையில் முட்டை சாப்பிடுவதால் நன்மைகள் ஏராளம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 7, 2023

அன்றாடம் காலையில் முட்டை சாப்பிடுவதால் நன்மைகள் ஏராளம்

பொதுவாக உணவுகளில் மிக ஆரோக்கியமான, அதே நேரம் எந்த பக்க விளைவும் இல்லாத ஒரு உணவு முட்டை .இந்த முட்டையை ஆம்லெட்டாகவோ அல்லது அவித்தோ அல்லது பொரித்தோ நாம் சாப்பிடலாம். இதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும்.

முட்டையின் மஞ்சள் கரு மாகுலர் சிதைவு, கண்புரை, மிக வேகமாக வயதாகும் நிலை ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.

உடலில் கொழுப்பு அதிகம் இருப்ப வர்கள் ஒவ்வொரு நாளும் அவித்த முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்வது ஆரோக்கியம் தரும்.

மேலும் ரத்த அழுத்தம் போன்ற உடல்நிலை பாதிப்புகள் இல்லாமல் இருப்பவர்கள் தினமும் ஓர் அவித்த முட்டையை சாப்பிடுவது நல்லது.

வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஓர் அவித்த முட்டை கொடுப்பது ,அவர்களின் செல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் உதவி அவர்களை ஆரோக்கியமாய் வைக்கிறது .

அவித்த முட்டையில் அத்தியாவசிய அமினோ அமி லங்கள் இருப்பதால் இது நம்முடைய வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள துத்தநாகம், செலினியம், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க மிகவும் முக்கியமான தாதுக்கள்.

முட்டையில் உள்ள  ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நம் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கின்றன.

முட்டையில் உள்ள அதிக ஆன்டி-ஆக் சிடன்ட்டுகள் உங்களுடைய கண்களை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

மேலும் அதிகம் முட்டை சாப்பிடுவதால்  கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கிறது.

முட்டையில் உள்ள  ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் புற ஊதாக் கதிர்களால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து உங்களு டைய கண்களை பாதுகாத்து தெளிவான பார்வையைக் கொடுக்கும். 

மேலும், முட்டை சாப்பிடுவதால்  சிறு வயதிலேயே கண்புரை வருவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

No comments:

Post a Comment