தருமபுரி, ஆக. 9- தருமபுரி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் 30.7.2023 அன்று பென்னாகரம்,கடமடை பகுதியிலுள்ள ஒன்றிய பொறுப்பா ளர்களுடன் சந்தித்து முகவரி, தொடர்பு எண்கள் சேகரிப்பு மற்றும் புதிய பொறுப்பாளர்களை இயக்கத்திற்கு சேர்க்கும் பணி நடைபெற்றது.
இந்நிகழ்வு தருமபுரி மாவட்ட தலைவர் கு.சரவணன் தலைமையில் நடைபெற்றது, தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் ஒன்றிய கழக மற்றும் புதிய பொறுப் பாளர்களுக்கு இயக்க வரலாற்றின் ஏடுகளை வழங்கி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பித் தார்.
இந்நிகழ்வில் ஒவ்வொரு ஒன் றியத்தின் பேருந்து நிறுத்தத்தில் இயக்க கொடி புதியதாக அமைத்து, ஒவ்வொரு ஒன்றியத்திலுள்ள பொறுப்பாளர்களின் வீட்டின் மேலும் இயக்க கொடி பறக்க விட வேண்டுமெனவும்.தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் விடுதலை அறிக்கையான செடி, கொடி, படி இதனை நிறைவேற்றும் விதமாக இந்த சுற்றுப்பயண சந்திப்பு அமைந்தது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலா ளர் பெ.கோவிந்தராஜ்,மாவட்ட துணை செயலாளர் சி.காமராஜ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கதிர்.செந்தில்குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பெ.மாணிக்கம்,பக ஆசிரியரணி இர.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இயக்க சுற்றுப்பயணத் தில் கலந்துக்கொண்டு சிறப்பித்த னர்.
No comments:
Post a Comment