மேட்டுப்பாளையம், ஆக. 8 - மேட்டுப் பாளையம் கழகத் தோழர் நாராயணன் துனைவியார் சிவகாமி மறை வையொட்டி மாவட்ட தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் நேரில் சென்று அம்மையாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். மேட்டுப்பாளையம் கழகத்தோழர் நாராயணனின் துணைவியாரும், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.பிரதிப்பின் தாயாரு மான சிவகாமி (வயது 43)நேற்று (7.8.2023) சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்
அம்மையாரின் இறுதி நிகழ்வுகள் அன்று மாலை 7 மணி அளவில் தேக்கம்பட்டி அருகில் உள்ள குட்டைப் புதூரில் அவர்களின் தோட்டத்தில் நடைபெற்றது
இறுதி நிகழ்வில் மேட்டுப்பாளையம் கழக மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி தலைமையில், மாவட்ட இளைஞ ரணி தலைவர் மு.வீரமணி, நகர செயலாளர் வெ.சந்திரன், நகர தலைவர் பழனிசாமி, உத்ரிநாதன், மேட்டூர் முரு கேசன், மேட்டுப்பாளையம் முருகேசன், தமிழ்மணி ஆகியோர் நேரில் சென்று அம்மையாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்து அம்மையா ரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத் தினர்.
முன்னதாக கோவை மருத்துவமனையில் மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் காப்பாளர் அ.மு.ராஜா, மாவட்ட இளைஞரணி இரா.சி. பிரபாகரன், தோழர் நியூட் டன் ஆகியோர் நாராயணன் குடும்பத்தினரை சந்தித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்கள்.
No comments:
Post a Comment