பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நாட்டின் மிகவும் முக்கியமான பதவி களில் தங்கள் ஆட்களையே நியமித்துள் ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
ஜம்மூ - காஷ்மீர் மாநில தலைமைக் காவல் இயக்குநர் (டி.அய்.ஜி.) சசிபவுல் வைத் என்பவர் சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சந்திரயான் நிலவில் இறங்கியதும் அங்கே ஒரு பதாகை உள்ளது. அதில் இது வக்பு வாரியத்திற்குச் சொந்தமான இடம் என்று எழுதப்பட்டிருப்பது போன்ற ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஜம்மு காஷ்மீரில் எங்கு சென்றாலும் இசுலாமியர்களால் ஆக்கிர மிக்கப்பட்ட பகுதி உள்ளது என்பதை நையாண்டி செய்யும் விதமாக நிலவிற்குச் சென்றாலும் அங்கும் இவர்கள் "இடம் இருக்கிறது" என்று எழுதி வைத்திருப் பார்கள் என்று கூறும் விதமாக இசுலாமிய வெறுப்பை வெளிக்காட்டியுள்ளார்.
இப்படித்தான் ஒன்றிய அரசின் பல்வேறு உயர்பதவிகளில் உள்ள அதி காரிகளின் செயல்பாடுகள் உள்ளன. இவர் ஜம்மு - காஷ்மீரில் இசுலாமியர்கள் மீது எவ்விதமான பார்வையை வைத் திருப்பார்? இவர் பதவியில் இருக்கும் வரை அங்குள்ள இசுலாமியர்களுக்கு நீதி கிடைக்குமா? என்பது முக்கியமான கேள்வி ஆகும்.
No comments:
Post a Comment