தந்தை பெரியார்
காண விரும்பிய உலகம்,..
தனித்துவமான உலகம்...
ஆண்களும் பெண்களும்
சரி நிகர் சமமாய்...
ஜாதி ஒழிந்த சமத்துவ உலகம்...
ஏழை - பணக்காரன் எனும்
நிலை இல்லா நிம்மதி உலகம்..
புதிய உலகம் படைக்க
தடைக்கல்லாய் இருக்கும்
அனைத்தையும் உடைக்கும்
தத்துவம் தந்தார் எங்கள்
தந்தை பெரியார்...
புது உலகம் படைக்க
என்னோடு வாருங்கள் என்றார்...
ஒரு பத்து வயதுச்சிறுவர்
தந்தை பெரியார் படைக்கு
வந்தார்...வளர்ந்தார்...
இயக்கத்தில் பிளவு...
உடன்பிறந்த அண்ணன் கூட
எதிர் அணியில்...
நேற்றுவரை ஓர் அணியில்
நின்று பேசியவர் எல்லாம்
எதிர் அணியில்..
எவரவரோ அழைத்தபோதும்
தந்தை பெரியாரின்
பக்கமே நின்றார்...பகை வென்றார்...
இன்று அவருக்கு வயது 90
எத்தனை கல்லெறிகள்..
எத்தனை சொல்லெறிகள்..
எதிரிகள்... துரோகிகள்...
எத்தனை வசைச்சொற்கள்..
இவர் காதில் ஏதும் விழவில்லை...
புது உலகம் படைத்திடவே
தந்தை பெரியாரின் தத்துவம்
மட்டுமே செவிகளில்... அறிவில்....
எவருக்காக உழைக்கிறோமா
அவர்களிடமிருந்தே
வசைச்சொற்கள்...
அதையெல்லாம் புறங்கையால் தள்ளி
எப்படி இப்படி
அலுக்காமல் சளைக்காமல்
ஓடி ஓடிப் பிரச்சாரம்...
ஓயாத பிரச்சாரம்
80 ஆண்டாய் பிரச்சாரம்
என நினைக்கையில்
வியப்பாக இருக்கிறது...
மலைப்பாக இருக்கிறது...
திகைப்பாக இருக்கிறது...
இப்படி ஒரு தலைவர்
பொதுவாழ்க்கையில் என்று!
‘தகைசால் தமிழர்’ விருது
நம் தலைவருக்கு...
‘திராவிட மாடல் ‘ ஆட்சி நடாத்தும்
மாண்புமிகு முதல்வர் கரங்களால்..
வணங்குகிறோம் தமிழர் தலைவரை...
வாழ்த்துகிறோம் நம் முதல்வரை...
எதிரிகள் கதறி ஓடட்டும்..
இரட்டைக்குழல் துப்பாக்கிகளின்
கொள்கை முழக்கக் குண்டுகள்
இந்தியா முழுவதும் பரவட்டும்
ஜாதி ஒழியட்டும்...
சமத்துவம் அமையட்டும்...
மதபீடைகள் ஒழியட்டும்...
மனித நேயம் வளரட்டும்.
தந்தை பெரியார் கனவு கண்ட
புது உலகம் மலரட்டும்..
முனைவர். வா.நேரு,
தலைவர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
No comments:
Post a Comment