அர்ச்­ச­கர்­கள் நிய­ம­னம்: தமிழ்­நாடு அர­சின் அர­சா­ணைக்கு தடை விதிக்க மறுப்பு: உச்சநீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 30, 2023

அர்ச்­ச­கர்­கள் நிய­ம­னம்: தமிழ்­நாடு அர­சின் அர­சா­ணைக்கு தடை விதிக்க மறுப்பு: உச்சநீதிமன்றம்

சென்னை, ஆக. 30 - அர்ச்­ச­கர்­கள் நிய­ம­னம் தொடர்­பான தமிழ்­நாடு அர­சின் அர­சா­ணைக்கு தடை விதிக்க உச்­ச­நீ­தி­மன்­றம் மறுத்­து­விட்­டது.

கோயில்­க­ளில் அர்ச்­ச­கர்­கள் மற்­றும் ஆக­மம் சம்­பந்­தப்­பட்ட பணி­யா­ளர்­களை நிய­மிக்க தடை விதிக்­கக் கோரி ஆதி சைவ சிவாச்­சா­ரி­யார்­கள் நலச்­சங்­கம் சார்­பில் சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் மனு தாக்­கல் செய்­யப்­பட்­டது.

தமிழ்­நாடு இந்து சமய நிறு­வன ஊழி­யர்­க­ளுக்கான சேவை விதி­கள், 2020இன் கீழ் கடந்த 2020ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் வெளி­யிட்ட அர­சா­ணைக்கு தடை விதிக்க வேண்­டும் என்­றும் அந்த மனு­வில் கோரப்­பட்டது. அந்த மனுக்­களை சென்னை உயர்­நீ­தி­மன்­றம் தள்­ளு­படி செய்து உத்தரவிட்­டது.

இத­னைத் தொடர்ந்து ஆதி சைவ சிவாச்­சா­ரி­யார்­கள் நலச்­சங்­கம் சார்­பில் உச்சநீ­தி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டது.

இந்த மனு, நீதி­ப­தி­கள் எம்.எம்.சுந்­த­ரேஷ், ஜெ.பி.பர்­தி­வாலா அடங்­கிய அமர்வு முன் விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது மனு­தா­ரர்­கள் தரப்­பில் சென்னை உயர்­நீ­தி­மன்ற உத்­த­ர­வுக்கு இடைக்­கால தடை விதிக்க வேண்­டும் என கோரப்­பட்­டது.

ஆனால், இதனை ஏற்க நீதி­ப­தி­கள் மறுத்­து­விட்­ட­னர். மேலும், இந்த மனு தொடர்­பாக தமிழ்­நாடு இந்து சமய அற­நி­லை­யத்­துறை பதில் மனு தாக்­கல் செய்­ய­வும் நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்­ட­னர்.

No comments:

Post a Comment