லண்டன், ஆக 12- பிரிட்டனில் வேகமாக பரவி அச்சுறுத்தி வரும் புதிய வகை கரோனா வைரஸான எரிஸ் இந்தியாவில் கடந்த மே மாதம் கண்டறியப் பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.
பிரிட்டனில் கோவிட் வைர சின் புதிய வகையான எரிஸ் என்ற வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனை அறிவியல் முறையில் ணிநி. 5.1 என்று மருத்துவ வல்லுனர்கள் அழைக் கின்றனர். ஒமிக்ரான் வைரசின் துணைப்பிரிவாக இந்த எரிஸ் வைரஸ் உள்ளதாக அறிவியலா ளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கரோனா வைரஸ் தாக்கப் பட்ட 7 பேரில் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் பிரிட்டனில் ஏற்பட்டுள்ளது. கரோனாவுக்கு பின்னர் வந்த வகைகளில் தற் போது பரவி வரும் எரிஸ் வைரஸ் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. முதன் முறையாக கடந்த மாதம் 3ஆம் தேதி இந்த வைரஸ் கண்டுபிடிக் கப்பட்டது. இது உலகம் முழு வதும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆசியாவில் இந்த வைரஸ் அதிகம் பரவியிருப்ப தாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குறித்து மேலதிக மாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
பிரிட்டனில் சமீபத்தில் வெளி வந்த பர்பீ, ஓப்பன் ஹெய்மர் படங்களுக்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் நெருக்கமாக தியேட்டர்களுக்கு சென்றனர். இதுவும் எரிஸ் வைரஸ் பரவுவ தற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் கடந்த மே மாதமே இந்தியாவில் கண்டறியப்பட்டதாக தகவல் கள் வெளிவந்துள்ளன.
இந்த தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது. மகாராட்டிரா வில் கடந்த மே மாதம் இந்த எரிஸ் வைரஸ் கண்டறியப்பட் டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பை ஏற் படுத்தவில்லை என்று கூறப் பட்டுள்ளது.
எரிஸ் வைரஸ் பாதிப்புக்கு கடந்த மாதம் 27ஆம் தேதி நிலவரப்படி சுமார் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய கரோனா வேரியன்ட் பாதிப்பால் 100-ல் 14 பேருக்கு உயிரிழப்புகள் ஏற்படலாம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment