ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 24, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

24.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மும்பையில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் அய்ந்து மாநில முதலமைச்சர்கள், 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* சந்திரனில் உள்ள மண்ணோடு நாமக்கல் பகுதி மண் ஒத்துப் போவதால், அதை பரிசோதனை செய்து, சந்திரயான் - 3 லேண்டர் தரையிறங்க உதவிகரமாக இருந்தது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகாரில்  நிதிஷ் அரசுடன் ஆளுநர் மோதல் போக்கு காரணமாக, துணைவேந்தர் பதவிகளுக்கு மாநில அரசே விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

தி ஹிந்து:

* தகவல் அறியும் சட்டத்தின் கீழ் 2013 முதல் பெறப்பட்ட நூற்றுக் கணக்கான விண்ணப்பங்கள் மற்றும் அதிகாரிகளின் பதில்கள் மறைந்து விட்டனவாம், ஒன்றிய அரசு தகவல்..

- குடந்தை கருணா


No comments:

Post a Comment