குற்றச் சட்டங்களில் 'இந்தியா' என்ற பெயர் நீக்கி பாரதிய என்று மாற்றமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

குற்றச் சட்டங்களில் 'இந்தியா' என்ற பெயர் நீக்கி பாரதிய என்று மாற்றமாம்!

புதுடில்லி ஆக.12  குற்றச்சட்டங் களான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சி சட்டம் ஆகிய வற்றிற்கு மாற்றாக 3 புதிய மசோ தாக்களை மக்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். 

மக்களவையில் நேற்று (11.8.2023) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சட்டங்களை மாற்றி அமைக்க புதிதாக 3 மசோதாக்களை தாக்கல் செய்தார். 1860இல் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்துக்கு(அய்பிசி) பதில் பாரதிய நியாய சன்ஹிதா (பாரதிய நீதிச்சட்ட மசோதா) 1898இல் கொண்டு வரப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டத்திற்கு பதில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா), 1872ஆம் ஆண்டின் இந்திய சாட்சியச் சட்டத்திற்கு பதில் பாரதிய சாக்ஷ்யா (பாரதிய சாட்சி சட்ட மசோதா) ஆகிய மசோ தாக்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: இந்த புதிய மசோதாக்கள் மூலம் நமது நாட்டில் தேங்கியுள்ள வழக்குகளில் விரைவான நீதியை வழங்குவதற்கும், புதிய சட்ட அமைப்பை உருவாக்குவதற்கும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் தற்போதைய காலத் திற்கு ஏற்பட மக்களின் தேவை களுக்கு ஏற்ப இந்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட் டுள்ள பாரதிய நாகரிக் மசோதாவில் தேச துரோகத்தை ரத்து செய்வ தற்கும், கும்பல் கொலை மற்றும் சிறார்களை பலாத்காரம் செய்தல் போன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச மரணதண்டனை வழங்குவதற்கான விதிகள் உள்ளன. 

சிறிய குற்றங்களுக்கான தண்டனைகளில் ஒன்றாக முதல் முறையாக குற்றம் செய்தால் சமூக சேவையை தண்டனையாக வழங்கு வதற்கான ஏற்பாடுகளும் மசோதா வில் உள்ளது.

நாட்டில் பிரிவினைச் செயல் கள், ஆயுதமேந்திய கிளர்ச்சி,  நாசகார நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள் அல் லது இந்தியாவின் இறையாண்மை அல்லது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் போன்ற புதிய குற்றங்களும் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது. இந்த மசோதாக்கள் நமது குற்றவியல் நீதி அமைப்பை மாற்றும் என்று நான் சபையில் உறுதி யளிக்கிறேன். இதன் நோக்கம் தண்டனையாக இருக்காது, நீதியை வழங்குவதாக இருக்கும். குற்றத்தை நிறுத்து வதற்கான உணர்வை உருவாக்க தண்டனை வழங்கப்படும். 

ஏனெனில் ஆங்கிலேயர்கள் இயற்றிய சட்டங்கள், தங்கள் ஆட்சிக்கு எதிரானவர்களைத் தண்டிக்கும் நோக்கில் அடிமைத் தனத்தின் அடையாளங்களால் நிறைந்திருந்தன. பிரிட்டன் ஆட்சி நிர்வாகத்தைப் பாதுகாப்பதும், பலப்படுத்துவதுமே அந்த சட்டங் களின் நோக்கமாக இருந்தன. மேலும் அவர்களது சட்டங்களில் தண்டனை வழங்குவதில் தான் அதிக கவனம் இருந்தது. 

நீதி வழங் குவதில் இல்லை. அந்த சட்டங்களை மாற்றுவதன் மூலம், புதிதாக அறிமுகம் செய்யப் பட்டுள்ள இந்த 3 சட்டங்கள் இந்திய குடிமகன்களின் உரிமை களைப் பாதுகாக்கும் உணர்வைக் கொண்டுவரும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் அரசுக்கு எதிரான குற்றங்களுக்கு புதிய சட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்றங்கள் பாலின வகை அடிப் படையில் நடுநிலைப் படுத்தப்பட் டுள்ளன. 

70 ஆண்டுக்கும் மேலான இந்திய ஜனநாயகத்தின் அனுபவம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட நமது குற்றவியல் சட் டங்களை விரிவாக மறுஆய்வு செய்து, மக்களின் சமகாலத் தேவைகள், இப்போது நடக்கும் குற்றங்களுக்கு ஏற்ப அவற்றை மாற்றி அமைக்க வசதியாக இந்த 3 புதிய மசோதாக்கள் நாடாளு மன்றத்தில் அறிமுகம் செய்யப்பட் டுள்ளன. அனைத்து குடிமக்களும் அணுகக்கூடிய மற்றும் விரைவான நீதியை வழங்குவதற்காக குற்றவியல் சட்டங்களின் கட்டமைப்பை ஒரு விரிவான மறுபரிசீலனை செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது. இவ் வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து இந்த 3 மசோதாக் களையும் நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும்படி மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவிடம் அவர் கேட்டுக் கொண்டார். 

இதுவரை இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சி சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், என்றுதான் குற்றவியல் சட்டங்கள் அழைக்கப்பட்டு வந்தன. ஏற்கெ னவே எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டி உள்ளன.

 தற்போது காலனி ஆதிக்க சட்டங்கள் என்று கூறி குற்றச்சட்டங்கள் மாற்றிய போது, அதில் உள்ள இந்தியா நீக்கப்பட்டு அதற்கு பதில் பாரதிய நீதிசட்ட மசோதா, பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்ட மசோதா, பாரதிய சாட்சி சட்ட மசோதாவாக மாற்றப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment