பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 4, 2023

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

பகுத்தறிவுவாதிகள் - விஞ்ஞானிகள் நாத்திகர்களே!

கவிஞர் கலி.பூங்குன்றன்

நீங்கள் என்னதாள் கரடியாகக் கத்தினாலும், கடவுள் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தாலும் மூடநம்பிக் கைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாலும் நாட்டில் கோயில்கள் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன - பக்தி வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டு தானிருக்கின்றது என்று நம்மைப் பார்த்து ஏகடியம் செய்பவர்கள் நாட்டில் உண்டு.

படித்த பாமரர்கள், படிக்காத பாமரர்கள் எனப்படும் இருவகையினரிடமும் பக்தி இருக்கிறது. கடவுள் நம்பிக்கையும் நிரம்ப உண்டு என்றாலும் அதனை வைத்து ஒரு முடிவுக்கு வருவது பாமரத்தனமே!

விஞ்ஞானிகள் அறிவாளிகள், சிந்தனையாளர்கள் மத்தியில் கடவுளுக்கு உள்ள இடம் எது? மதத்திற்குரிய மதிப்பீடு என்ன என்பதுதான் முக்கியம். 

"அறிவாளிகளுக்கு இறை நம்பிக்கை குறைவு” என்ற தலைப்பில் 'தினமணி' ஏட்டில் வெளிவந்த செய்தி இதோ:

அறிவாளிகளுக்கு 

இறை நம்பிக்கை குறைவு!

சாதாரண மக்களுடன் ஒப்பிடுகையில் அறிவாளி களுக்கு இறை நம்பிக்கை குறைவாகவுள்ளதாக, லண்டன் அலஸ்டொ பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தாங்கள் நடத்திய ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிலும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் அறிஞர்களுக்கு இறை நம்பிக்கை மிக மிகக் குறைவு. தாங்கள் புத்திக் கூர்மையோடு திகழ்வதற்கு தங்களது திறனே காரணம்: இதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை என்றே பெரும்பாலான பிரிட்டன் பல்கலைக்கழக பேராசிரி யர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

(தினமணி)

- - - - -

இறை நம்பிக்கை;

பிரிட்டனில் ஆரம்பக் கல்வி பயில்பவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை அதிகம் உள்ளது. அவர்கள் வளர்ந்து அறிவு முதிர்ச்சி பெறப் பெற அவர்கள் மத்தியில் இறை நம்பிக்கை மெதுவாகக் குறைய ஆரம்பித்து விடுகிறது. அந்தவகையில் 20-ஆம் நூற்றாண்டில் இருந்து 137 வளரும் நாடுகளில் மக்கள் மத்தியில் சமய நம்பிக்கை குறைந்து வருகிறது. மக்கள் அறிவாளிகளாக மாறிவருவதே இதற்குக் காரணம் பிரிட்டனில் 3,3 சதவீதம் பேரிடம்தான் இறை நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர். 68.5 சதவீதம் பேர் தங்கள் மீதான நம்பிக்கை தவிர்த்து வேறெந்த நம்பிக்கையும் இல்லை என தெரிவித்ததாக, இந்த ஆராய்ச்சிக் குழுவில் இடம்பெற்ற பேராசிரியர் ரிச்சர்டு லைன் தெரிவித்தார். 

(தினமலர் 13.8.2008, பக்கம்: 10) 

- - - - -

20-ஆம் நூற்றாண்டில் வளர்ந்து வரும் 133 நாடுகளில் சமய நம்பிக்கை குறைந்து வருவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன,

'இந்து' ஏடும் (16.9.2005) ஒரு கணிப்பினை வெளியிட்டது.

நீங்கள் எத்த அளவிற்கு மத நம்பிக்கை கொண்டுள்ளீர்கள் என்ற வினாவுக்கு ஓரளவுக்கு என்று 49 சதவீதத்தினரும், எனக்கு மதப்பற்று அறவேயில்லை என்று கறாராகக் கூறியவர்கள் 14 விழுக்காட்டினரும், அதிகப் பற்றுக் கொண்டுள்ளேன் என்று 45 விழுக்காட்டினரும் கூறினர் என்று 'இந்து' வெளியிட்டது.

கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபடு வீர்களா என்ற வினாவுக்கு வாரத்தில் ஒன்றுக்கு மேற் பட்ட முறையில் செல்வேன் என்று 31 விழுக் காட்டினரும். வாரம் ஒரு முறை செல்வோம் என்று 38 விழுக்காட்டினரும் மாதத்திற்கு ஒருமுறை போவேன் என்று 18 விழுக்காட்டினரும் இரு வாரத் திற்கு ஒரு முறை செல்வோம் என்று 4 விழுக்காட்டினரும் கருத்துக் கூறினார்கள்.

இன்றைய நாள்களில் இளைஞர்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு 'ஆம் உண்டு என்று 45 விழுக்காடு மக்களும், அதிகமானவர்களுக்கு உண்டு என்று 34 விழுக்காட்டினரும். மிகச் சிலருக்கே உண்டு என்று 21 விழுக்காட்டினரும் கருத்துக் கூறினர்.

18 வயது முதல் 45 வயது வரை உள்ள இரு பாலாரையும் சேர்த்து 220 பேர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கிடைத்த விடையே இது என்று 'இந்து' கூறுகிறது. 

- - - - -

கடவுள் நம்பிக்கையின் ஆணி வேர், மத நம்பிக் கையின் அடித்தளம் இற்று வீழ ஆரம்பித்துவிட்டது; நொறுங்கத் தொடங்கியிருக்கிறது என்பது காமாலைக் கண்ணர்களைத் தவிர பொது நிலையில் நின்று சிந்திப்பவர்களுக்கு விளங்காமற் போகாது.

அமெரிக்காவின் 'Nature' என்கிற விஞ்ஞான இதழில் வெளிவந்த தகவல் ஒன்றினை "ராணி” வார இதழ் வெளியிட்டு இருந்தது.

கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள் பற்றிய தகவல் அது.

1914இல் 72 விழுக்காடு

1993இல் 85 விழுக்காடு

1999-இல் 90 விழுக்காடு 

('ராணி 11.7.1999) 

விஞ்ஞானிகளில் கடவுள் தம்பிக்கையற்றவர்களின் விழுக்காடு இது.

- - - - -

பிரிட்டனில்

UNI செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி இதோ:

பிரிட்டன் பாதிரியார்கள் 10-இல் ஒருவர்தான் ஆதாம், ஏவாளை நம்புகின்றனர்!

27.12.1999 நாளிட்ட UNI செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூறுவதாவது: 

லண்டன் (ராய்ட்டர்ஸ், டிசம்பர் 27 1999) பிரிட்டிஷ் தேவாலய தலைவர்கள் பத்தில் ஒருவர்தான் ஆதாம், ஏவாளை நம்புகின்றனர் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது. 

பி.பி.சி. ரேடியோ நடத்திய வாக்கெடுப்பில் பங்கேற்ற ஆங்கிலிகன், மெதடிஸ்ட்டு, கத்தோலிக்கத் தலைவர்கள் 103 பேர்களில் மூவர் மட்டுமே உலகிளை ஆறு நாள்களில் இறைவன் படைத்தான் என்னும் படைப்புப்பற்றிய கருத்தை நம்புவதாகக் கூறினார்கள். 

அவர்களிடம் ஆதாம். ஏவாள் என்போர் உண் மையில் இருந்தார்கள் என்று நம்புகிறீர்களா என்று கருத்துக் கேட்கப்பட்டபோது 13 சர்ச் தலைவர்கள் மட்டுமே ஆமாம் என்று ஒப்புக் கொண்டனர். அவர்களில் நான்கில் ஒருவர் கன்னிப் பிறப்பை நம்பவில்லை என்றும் சொன்னார்கள்.

- - - - -

அமெரிக்காவின் நிலை

அமெரிக்கர்களில் மத நம்பிக்கை மறைந்து வருகிறது. இளைய தலைமுறையினர் மதம் மாறு கின்றனர்!

இது தொடர்பாக சமீபத்தில் நடத்திய சர்வேயில் கிடைத்த தகவல்கள்: அமெரிக்காவில் மதப்பிடிப்பு வேகமாக குறைத்து வருகிறது. தங்கள் பிள்ளைகள் மத நம்பிக்கை இல்லாமல் இருப்பதையோ. மதம் மாறுவதையோ 25 சதவிகித பெற்றோர் அனுமதிக் கின்றனர். அமெரிக்காவில் கத்தோலிக்க, பிராட்டஸ் டன்ட் உட்பட்ட கிறிஸ்வர்கள் மற்றும் யூத மதத்தினரும் மதப்பிடிப்புகளை இழந்து வருகின்றனர். மொத்தத்தில் 44 சதவிகிதம் பேர், மத நம்பிக்கை இல்லாமலோ, மதம் மாறியோ இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. 

இளைய தலை முறையினரில் பெரும்பாலோர், மதம் சம்பந்தப்பட்ட நம்பிக்கைகளிலும் விழிப்புணர் வுடன் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டனர்; அவர்களுக்குத் தெளிவான விளக்கம் கிடைக்காததால், அவர்களின் நம்பிக்கை மாறுகிறது என்றும் கூறுகின்றனர். இது தொடர்பாக, ஆன்லைன் மூலம், 35 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவர்கள் அளித்த பதிலில் இருந்து, கத்தோலிக்க பிரிவில் தான் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மத நம்பிக்கை இல்லாதவர்கள் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் 35 வயதில் உள்ளவர்களில் மத நம்பிக்கை உள்ளவர்கள் வெகு குறைவாகி விடுவர் என்று கணிக்கப்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்த வரை, மதத்துக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால், கல்வியுடன் மதத்துக்குத் தொடர்பில்லை; அதுபோல, இணைய நிபுணர்கள் உட்பட திறமை சார்ந்த பணியாளர்களிடையே மதத்துக்கு தொடர்பில்லை. அதனால் தான் மத நம்பிக்கை, மதப்பிடிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. 

அமெரிக்கர்களில் 8 சதவிகிதம் பேர், அவர்கள் சார்ந்த மதத்தின் மீது எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் உள்ளனர். அதற்காக மதம் மாறவில்லை. வாழ்க்கைக்கு மதம் சார்ந்து இருக்கலாம்: ஆனால், அன்றாட வாழ்க் கைக்கு முக்கியமில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

(தினமலர், 6.3.2008, பக். 16)

(தொடரும்)

No comments:

Post a Comment