கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 6, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

6.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉 ‘இந்தியா' கூட்டணி தலைவர்கள் ஆகஸ்ட் 31இல் மும்பையில் சந்திப்பு.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉 காஷ்மீர் சிறப்புத் தகுதி 370 பிரிவு நீக்கப்பட்டதன் நான்காம் ஆண்டு முடிவடைந்த நாளில் பிடிபி கட்சி, தேசிய மா நாடு கட்சி அலுவலகங்களை மூடி முத்திரை வைப்பு  - மெகபூபா முப்தி வீட்டுக் காவலில் வைப்பு.

👉  ஹிந்துத்வா என்ற பெயரில் மக்களை பாஜக பிளவு படுத்துகிறது என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் குற்றச்சாட்டு.

👉 ஹிந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் ஏற்க வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு திமுக தலைவர் கடும் எதிர்ப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

👉 சமீபத்திய என்.சி.இ.ஆர்.டி. பாடநூல் பகுத்தறிவு மற்றும் நேருவின் இந்தியாவின் இலட்சியங்கள் நீக்கம் குறித்து வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாபர், 'பெரும் பான்மை என்பது ஒரு அதிகாரபூர்வமான ஜனநாயக விரோத அமைப்பாக எளிதில் மாறலாம் என தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தி இந்து:

👉  டோரன்ட் பவர் நிறுவனத்தின் அலுவலகத்தை சேதப்படுத்தியதாகவும், ஊழியர்களை அடித்ததாகவும்  குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.பி. ராம் சங்கர் கத்தேரியா விற்கு இரண்டு ஆண்டு சிறை விதிப்பு. பதவி பறிபோகும் வாய்ப்பு.

தி டெலிகிராப்:

👉 ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்த 26 மணி நேரத்தில் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 26 மணி நேரம் கடந்து விட்டது, இன்னும் எம்.பி. பதவி திருப்பித் தரப்படவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி பயப்படுகிறாரா? உச்ச நீதிமன்றம் தண்ட னையை நிறுத்தி வைத்ததன் மூலம், ராகுல் நாடா ளுமன்றத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும்’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment