நார்வே எழுத்தாளர் சரவணனுக்கு தமிழர் தலைவர் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 2, 2023

நார்வே எழுத்தாளர் சரவணனுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நார்வே நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைசிறந்த ஆராய்ச்சியாளர் எழுத்தாளர் என். சரவணன் அவர்கள் 31.7.2023 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து புத்தகங்கள் வழங்கினார். அவரு டைய 'தலித்தின் குறிப்புகள்'  புத்தகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தந்தை பெரியார் அவர்களுடைய பங்களிப்பைச் சரியான முறையில் பதிவு செய்திருப்பது குறித்து ஆசிரியர் அவர்கள் அதனைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். பதிப்பாளர் கோ. ஒளிவண்ணன் உடன் இருந்தார்.

இதுகுறித்து எழுத்தாளர் சரவணன் தமது முகநூல் பதிவில் (31.7.2023) குறிப் பிட்டுள்ளதாவது, 

"அய்யா வீரமணி அவர்களை சென்று சந்தித்தேன். பெரியார் திடலுக்கு நான் சென்ற முதல் சந்தர்ப்பம். தோழர் கோ.ஒளிவண் ணன் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந் தார். வீரமணி அய்யா என்னை கண்டதும் நீங்கள் சரவணன் தானே என்று கேட்டதும் வியப்படைந்தேன்.

அய்ந்து ஆண்டுகளுக்கு முன் கி.வீரமணி அய்யாவிடம் "தலித்தின் குறிப்புகள்" நூலை தோழர் கோ. ஒளிவண்ணன் அவர்கள் சேர்த் திருந்த போது அதனை வாசித்து, அதைப் பற்றி தனது கட்டுரை ஒன்றிலும் குறிப்பிட்டு எழுதி இருந்தார். ஒரு கூட்டத்திலும் அந்த நூலை பற்றி பேசி இருக்கிறார். முதல் தடவையாக இன்று அவரை சந்தித்ததுமே "நீங்க சரவணன் தானே.." என்றதும் உண் மையில் சற்று அதிர்ந்து விட்டேன். இந்த வயதில் அவரின் நினைவாற்றல் பிரமிப்பை தந்தது. 

மிகவும் பரபரப்பும் பல வேலைகளுட னும் இருப்பவர் அவர். சந்திப்பதற்காக பலர் காத்திருந்து அது வெற்றி அளிக்காமல்  திரும்பிச்  சென்றவர்களைக் கண்டேன். இரு நாட்களில் என்னை மீண்டும் சந்திக்க விரும்பினார். எனது பயணத்தின் காரண மாக சந்திப்பு சாத்தியப்பட முடியாததை வருத்தத்துடன் தெரிவித்தேன். ‘விடு தலை'க்கு எழுதும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்."

இவ்வாறு அவர் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment