மணிப்பூரில்: அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கியுள்ளது காவல்துறை தலைமை இயக்குநர் நேரில் ஆஜராக வேண்டும் : உச்சநீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

மணிப்பூரில்: அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கியுள்ளது காவல்துறை தலைமை இயக்குநர் நேரில் ஆஜராக வேண்டும் : உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஆக.3 - மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கி யுள்ளதாக கூறிய உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணையின் போது, காவல்துறை தலைமை இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள் ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் 1.8.2023 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போதுஆஜரான சொலிசிடர் ஜெனரல்துஷர் மேத்தா, ‘‘வன்முறை தொடர்பாக 6,523 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 11 முதல் தகவல் அறிக்கைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்புடையவை. பெண் கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம் பவம் தொடர்பாக ஒரு சிறார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்’’ என தெரிவித்தார். 

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், ‘‘மணிப்பூரில் மேலும் இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல் லப்பட்ட விவரம்  எங்கே? இது தொடர்பாக யாரும் கைது செய் யப்பட்டுள்ளனரா? நாங்கள் 6,000  முதல் தகவல் அறிக்கைகளை பார்த்துவிட்டோம்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த துஷார் மேத்தா, ‘‘இந்த தரவுகளில் சில பிழைகள் இருக்கலாம். மே 15ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட ஜீரோ முதல் தகவல் அறிக்கைகள், ஜூன் 16-ஆம் தேதியன்று வழக்கமான முதல் தகவல் அறிக்கைகளாக மாற்றப்பட்டுவிட்டன. பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைது விவரம் என்னிடம் இல்லை’’ என்றார்.

இதனால் கோபம் அடைந்த தலைமை நீதிபதி ‘‘மே 4ஆ-ம் தேதி நடந்த சம்பவத்துக்கு, ஜூலை 26ஆ-ம் தேதியில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள் ளது. ஒரு சில வழக்குகளை தவிர, மற்ற வழக்குகளில் கைது நடவ டிக்கை இல்லை. காவல்துறை விசாரணை மிக மந்தமாக நடந் துள்ளது. முதல் தகவல் அறிக்கை கள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எந்த கைதும் இல்லை. கடந்த 2 மாதங்களாக பாதிக்கப்பட்டவர் களின் வாக்குமூலங்களைக்கூட பதிவு செய்யப்படாத சூழல் இருந்துள்ளது. சட்டம், ஒழுங்கு முற்றிலும் இல்லை. மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கி யுள்ளது.

அடுத்த விசாரணை திங்கள் கிழமை நடைபெறும்போது, மணிப் பூர் காவல்துறை தலைமை இயக்குநர் நேரில் ஆஜராக வேண்டும். சம்பவம் நடந்த தேதிகள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட தேதிகள், சாட்சியங்கள் பெறப் பட்ட தேதிகள், கைது செய்யப் பட்ட தேதிகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment