தூத்துக்குடி மாநகரில் கொடியேற்றும் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

தூத்துக்குடி மாநகரில் கொடியேற்றும் விழா

தூத்துக்குடி, ஆக. 3 - தூத்துக்குடி மாநகரில் 31.7.2023 அன்று காலை ஒன்பது மணிக்கு தொடங்கி பகல் இரண்டு மணிவரை  கழகக்கொடியேற்றும் நிகழ்ச்சி மிகவும் உற்சா கமாக நடைபெற்றது.

முதலாவதாக அறி வாசான் தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டச் செயலாளர் கோ.முருகன் மாலையணிவித்தார். 

முத்தையாபுரத்தில் கிளைக் கழகத்தலைவர் அழகுமுனியம்மாள்  - செல்வராசு ,இல்லத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.நவீன் குமார்,மாவட்ட மாண வர் கழக செயலாளர் செ.வள்ளி ஆகியோர் முன்னிலையில் காப்பா ளர் மா.பால்இராசேந்தி ரம் கொடியேற்றினார். மாவட்டக்கழக துணைச் செயலாளர் சி.மணிமொ ழியன் இல்லத்தில் காப் பாளர் சு.காசி கழகக் கொடியேற்றி வைத்தார். தந்தை பெரியார் சிலை அருகே மாவட்ட துணைச் செயலாளர் சி.மணிமொழியன் கழகக் கொடியேற்றிவைத்தார்.

மின்பொறியாளர் இராதா இல்லத்தில் மாந கர செயலாளர் செ.செல் லத்துரை கழகக் கொடி யேற்றி வைத்தார். கழக காப்பாளர் சு.காசி இல் லத்தில் மாவட்டத் தலை வர் மு.முனியசாமி கழகக் கொடியேற்றி வைத்தார். மாவட்டத் துணைத் தலைவர் இரா.ஆழ்வார் இல்லத்தில் இணையர் செயா,மகள் கங்கா, மரு மகன் கோமதிநாயகம், பேரப்பிள்ளைகள் கதிர்,காவியா ஆகியோர் முன்னிலையில் மாவட்டச் செயலாளர் கோ.முருகன் கழகக் கொடி யேற்றிவைத்தார் 

கீழத் தட்டப்பாறை யில் மாவட்ட மாணவர் கழகத்தலைவர் மா.தெய்வப்பிரியா இல்லத்தில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் செல்வராசு கழகக் கொடியேற்றி வைத்தார்.

சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் வழக்குரை ஞர் செல்வம், கோ பால் சாமி, பொ.போஸ், மாவட்ட இளைஞரணி செயலா ளர் செ.நவீன் குமார், மாநகர இளைஞர் அணி தலைவர் இ.ஞா.திரவியம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள். தூத் துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளராக பொறுப் பேற்றுள்ள ஆட்டோ ம. கணேசன் அவர்களுக்கு கழக மாவட்டத்தலைவர் மு.முனியசாமி பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

No comments:

Post a Comment