கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 4, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

4.8.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:

👉 இந்தியா கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி டில்லி அரசை கட்டுப்படுத்தும் மசோதா நேற்று (3.8.2023) மக்களவையில் நிறைவேறியது.

👉 மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.கிருஷ்ணய்யா, பிரதமர் மோடியை சந்தித்து பிற்படுத்தப்பட்டோருக்கு நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கை மனுவை அளித்தார்.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

👉உடல் உறுப்பு கொடையில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

தி இந்து:

👉 1,365 அய்.ஏ.எஸ். பணியிடங்கள், 703 அய்.பி.எஸ். பணியிடங்கள் காலியாக உள்ளதாக அரசு மாநிலங்கள வையில் தெரிவித்துள்ளது. இவை தவிர, இந்திய வனப் பணியில் (IFS)1,042 காலியிடங்களும், இந்திய வருவாய் சேவை யில் (IRS) 301 இடங்கள் காலியாக உள்ளன என்று ஒன்றிய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

தி டெலிகிராப்:

👉 அசாமின் தர்ராங் மாவட்டத்தில் ஜூலை இறுதியில் மங்கள்தோய் தனியார் பள்ளியில் ஆயுதப் பயிற்சி முகாம் நடத்திய இந்துத்துவா அமைப்பை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் முகாமில் வி.எச்.பி. அமைப்பால் உருவாக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த ராஷ்டிரிய பஜ்ரங் தள உறுப்பினர்கள் கலந்து கொண்டு வளாகத்திலேயே தங்கினர்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment